TamilSaaga

சிங்கப்பூர் ST Engineering – Marine துறையில்  வேலை வாய்ப்பு அறிவிப்பு!

சிங்கப்பூரில் வேலை கிடைக்காத என பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூரிலேயே மிக முக்கியமான பெரிய கம்பெனி ஒன்றிலேயே அதிகமான வேலை வாய்ப்புக்கள் கொட்டி கிடக்கிறது.

ST Engineering (Singapore Technologies Engineering Ltd) என்பது சிங்கப்பூரில் மிகப்பிரபலமான மற்றும் புகழ்பெற்ற MNC (Multi-National Corporation) ஆகும். பல துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இந்தக் கம்பெனியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் பொறியியல் குழுமங்களில் ஒன்று. உலகளவில் 23,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் கிளைகள் செயல்படுகின்றன.

ST Engineering நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்:

துறைகள்:

  1. Aerospace (வான்வெளி தொழில்நுட்பம்)
  2. Marine (கடல் தொழில்நுட்பம்)
  3. Smart City (நவீன நகரத் திட்டங்கள்)
  4. Defence and Public Security (பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு)

ST Engineering நிறுவனம் தனது அனைத்து கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது தங்களின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. என்ன வேலை, எந்த துறை, எந்த தேதியில் வேலை வாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டது, பணியிட விபரம் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. கடைசி 7 நாட்களில் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் இருக்கும்.

Post Name: Driver, Transportation-Benoi

Job Location: Marine – 60 Tuas Road, SG

5 days work week

Working Hours: 7.25am to 5.00pm

Eligibility:

  • 1 முதல் 5 ஆண்டுகள் வரை ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Class 3 மற்றும் Class 4 ஓட்டுநர் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
  • பஸ் மற்றும் லாரி இரண்டையும் ஓட்டும் திறன் இருந்தால் கூடுதல் நன்மையாக கருதப்படும்.
  • சிங்கப்பூர் சாலைகள் மற்றும் முக்கிய அடையாள இடங்கள் (landmarks) பற்றி தெரிந்திருக்க வேண்டும்
  • நேரம்கடைப்பிடிக்கும் திறன் முக்கியம்.
  • குழுவாக இணைந்து பணியாற்றும் திறனும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையும் வேண்டும்.

Job Profile:

  • போக்குவரத்து விதிகள்: சாலையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்துக் காவல்துறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
  • விபத்துகள்/காயங்கள் அறிக்கை: சிறிய அளவிலான காயங்கள் அல்லது விபத்துகள் நடந்தாலும், உடனடியாகத் தங்கள் நேரடி உயர் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
  • பணியிடத்தில் எப்போதும் நல்ல தூய்மையை (housekeeping) பராமரிக்க வேண்டும்.
  • அலுவலகத்தின் வெவ்வேறு கிளைகளுக்கு இடையே ஆவணங்கள்/கோப்புகளை தினமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
  • அலுவலகத்தின் மற்ற அவசரப் பணிகளையும், அவ்வப்போது ஒதுக்கப்படும் இதர பணிகளையும் செய்ய வேண்டும்.

ST Engineering நிறுவன வேலைக்கு Apply செய்யும் முறை :

https://careers.stengg.com/job/Marine-60-Tuas-Road-Driver%2C-Transportation-Benoi/1065963266/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உன் பெங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply now என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் உங்களின் CV upload செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி உள்ளிட்ட சுய விபரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பு apply என கொடுத்து விட்டால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு உங்களின் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு விடும்.

அல்லது எளிமையாக நேரடியாக Apply Now என்ற இணையதள முகவரியில் சென்றும் உங்களுக்கான வேலை வாய்ப்பு விபரத்தை தெரிந்து கொண்டு, விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

ST Engineering-ல் சேருவதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் உச்ச நிலையை அடைய வாய்ப்பு கிடைக்கும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts