சிங்கப்பூரில் Skilled Test எழுதத் தேவையான தகுதிகள் மற்றும் எந்த விசா மூலம் வந்தவர்கள் எழுதலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. இது குறித்து விரிவாகக் காண்போம்.
சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள், Skilled Test (திறமைத்திறன் தேர்வு) எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை,
1️⃣ இந்தியாவில் இருந்தே எழுதலாம் அல்லது
2️⃣ சிங்கப்பூருக்கு சென்று எழுதி தகுதி பெறலாம்.
ஆனால், இந்த தேர்வுக்கு சில குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு நிர்ணயித்துள்ளது.
Skilled Test அடிப்பதற்கான தகுதிகள் :
சிங்கப்பூரில் Skill Test எழுத விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். BCA Academy அல்லது BCA வால் அங்கீகரிக்கப்பட்ட Training and Testing Centres-களில் இருக்கும் SEC(K) மூலம் ஊழியர்கள் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
எந்த விசா மூலம் வந்தவர்கள் Skilled Test எழுதலாம்?
பொதுவாக, பின்வரும் விசாக்களில் சிங்கப்பூர் வந்தவர்கள் Skilled Test எழுதலாம்:
Work Permit: Work permit வைத்திருப்பவர்கள் Skilled Test எழுதலாம்.
S Pass: S Pass வைத்திருப்பவர்களும் Skilled Test எழுதலாம்.
Employment Pass: Employment Pass வைத்திருப்பவர்களும் Skilled Test எழுதலாம்.
Tourist Visa மூலம் சிங்கப்பூர் வந்தவர்கள் Skilled Test எழுதலாமா?
Tourist Visa மூலம் சிங்கப்பூர் வந்தவர்கள் பொதுவாக Skilled Test எழுத முடியாது. Skilled Test எழுத, விண்ணப்பதாரர் வேலை அனுமதி அல்லது வேறு தகுதியான விசா வைத்திருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் Skilled Test எழுத, ஊழியர்கள் வைத்திருக்கும் Work Pass அல்லது S Pass போன்றவை குறைந்தபட்சம் ஓராண்டிற்காவது செல்லுபடியாக இருக்க வேண்டும்.
Skilled Test எழுதுவதற்கு முன், விண்ணப்பதாரர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) இணையதளத்தில் தகுதிகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் அனுபவம் இல்லாத புதிய ஊழியர்கள் அல்லது 4 ஆண்டுகளுக்குக் குறைவான அனுபவம் உள்ள ஊழியர்கள் திறன் சோதனை (Skilled Test) எழுத முடியும்.
சிங்கப்பூரில் R1 தகுதி கொண்ட உயர் திறன் தொழிலாளராக இருக்க, ஒருவர் குறைந்தபட்சம் 1600 சிங்கப்பூர் டாலர்களை அடிப்படை சம்பளமாகப் பெற வேண்டும் அல்லது அதற்கு இணையான உயர் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்தாலே R1 தகுதி பெற முடியும்.
R1 தகுதி பெற, சம்பளம் மற்றும் தகுதிகள் இரண்டும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏதேனும் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டால் போதும்.
மேலும் தகவல்களுக்கு, மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்: https://www.mom.gov.sg/