TamilSaaga

சிங்கப்பூர் S Pass சம்பள உயர்வு: வயதுக்கேற்ப ஊதிய மாற்றங்கள்…. சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள முக்கிய Updates!!

S-Pass என்பது சிங்கப்பூரில் பணிபுரியும் விசா ஆகும். இது சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இரசாயனங்கள், மின்னணுவியல், விண்வெளி பொறியியல், கடல், மருந்துகள் மற்றும் பிற துறைகளில் மேம்பட்ட நிபுணத்துவம் பெற்ற நடுத்தர அளவிலான திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்றது.

சிங்கப்பூரில் S Pass வைத்து வேலை செய்ய விரும்பும் நண்பர்களுக்கு, பொதுவாக கிடைக்கும் துறைகள் பற்றிய தெளிவான பார்வையை இந்த பதிவில் பார்க்கலாம்:

யார் விண்ணப்பிக்கலாம்?

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திலிருந்து செல்லுபடியாகும் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பட்டயம் அல்லது பட்டம் போன்ற மூன்றாம் நிலை கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய தொழில்முறை சான்றிதழ்கள் அல்லது குறிப்பிடத்தக்க வேலை அனுபவம் இருந்தால் நீங்கள் தகுதியுடையவராக இருக்கலாம்.

S-Pass குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு:

  • S-Pass அனுமதி அட்டைக்கு தகுதிபெறும் குறைந்தபட்ச ஊதியம் $3,150லிருந்து $3,300 ஆக அதிகரிக்கப்படும்.
  • வயதுக்கேற்ப இந்த குறைந்தபட்ச ஊதியம் படிப்படியாக உயர்த்தப்படும்.
  • 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு குறைந்தபட்ச ஊதியம் $4,650லிருந்து $4,800 ஆக உயர்த்தப்படும்.

நிதிச் சேவைகள் துறை:

S-Pass அனுமதிக்கான குறைந்தபட்ச ஊதியம் $3,650லிருந்து $3,800 ஆக அதிகரிக்கப்படும். இதுவும் வயதுக்கேற்ப உயரும்.

செயல்படுத்தும் காலம்:

  • 2025 செப்டம்பர் 1 முதல், புதிய எஸ்-பாஸ் விண்ணப்பங்களுக்கு இந்த புதிய வரம்புகள் பொருந்தும்.
  • 2026 செப்டம்பர் 1 முதல், காலாவதியாகும் எஸ்-பாஸ் புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கும் இத்திட்டம் அமலாகும்.

S-Pass தாரக அமைப்பு கட்டணம் (Tier 1 Levy):

2025 செப்டம்பர் 1 முதல் $550லிருந்து $650 ஆக அதிகரிக்கப்படும்.

ஊழியர்களின் வயதுக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக 45 வயதுடைய ஊழியர்களின் சம்பளம் சுமார் 5,650 வெள்ளியாக இருக்கலாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) தெரிவித்துள்ளார்.

S Pass பிரிவுகளில் கிடைக்கும் துறைகள்:

  • உற்பத்தி (Manufacturing)
  • கட்டமைப்பு (Construction)
  • சேவைத் துறை (Service Sector)
  • கடைகள் மற்றும் ஓட்டல்கள்
  • தகவல் தொழில்நுட்பம் (IT)

S-Pass விண்ணப்ப செயல்முறை:

தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், வேலை அனுபவ சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பதாரர் விவரங்கள்: உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, வேலை அனுபவம் மற்றும் சம்பள விவரங்கள் போன்றவற்றை விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டும்.

MOM (Ministry of Manpower) உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து, தேவையான ஆவணங்களை சரிபார்க்கும். உங்கள் தகுதிகள் மற்றும் முதலாளியின் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts