இந்த நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது என்பது போல அண்மைக்காலமாக காவல் நிலையங்களும் விசித்திரமான பல வழக்குகளை கண்டு வருகின்றது. இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரெட்டி என்ற மாவட்டத்தில் உள்ளது தான் ஜோகிபேட் என்ற ஊர் இங்கு வசித்து வரும் 22 வயது ஆட்டோ டிரைவர் ஒரு நல்ல “குடிமகன்” அதாவது மதுபிரியர். அடிக்கடி அருகில் உள்ள மதுக்கடைக்கு செல்லும் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிப மதுபிரியருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவரும் ஒன்றாக இணைந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர், ஒருநாள் போதையில் பாசம் தலைக்கு ஏற, அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த வாலிபரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாக கூறியுள்ளார். இளைஞரும் அதற்கு சம்மதிக்க, இருவருக்கும் அருகில் உள்ள கோவிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் நடந்துள்ளது.
போதையில் இளைஞருக்கு தாலி கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார் அந்த ஆட்டோ ஓட்டுநர், மகன் தாலியுடன் வந்ததை பார்த்து அதிர்ந்த இளைஞனின் பெற்றோர் அவனை வீட்டை விட்டு துரத்த செய்வது அறியாமல் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு சென்றுள்ளார் அவர்.
உங்கள் மகன் எனக்கு தாலி கட்டியுள்ளார் ஆகவே அவரோடு தான் வாழ்வேன் என்று இளைஞன் கூற, அவர்களும் அவரை விரட்டிவிட்டுள்ளனர். இறுதியில் செய்வதறியாது போலீசில் புகார் அளிக்க, அவர்கள் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளார்.
இவர் தாலி கட்டியதால் எனது பெற்றோர் என்னை வீட்டில் இருக்க அனுமதிக்கவில்லை, ஆகவே இவரோடு தான் வாழ்வேன் அல்லது 1 லட்சம் நஷ்டஈடு வேண்டும் என்று கூறியுள்ளார். இறுதியில் 10,000 ரூபாய் தர ஆட்டோ டிரைவர் சம்மதிக்க அதை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அவர் சென்றுள்ளார் அந்த இளைஞர்.
குடி.. நாட்டிற்கும்.. வீட்டிற்கும்.. உடலுக்கும்.. பையில் இருக்கும் காசுக்கும் கேடு..