TamilSaaga

“இது உங்க வானம்” : இந்தியாவில் அறிமுகமாகும் “புதிய மலிவு விலை” விமான சேவை நிறுவனம் – AKASA Air

இந்தியாவின் பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் விமானப் போக்குவரத்து வீரர்களான வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரால் ஆதரிக்கப்படும் இந்தியாவின் புதிய பட்ஜெட் விமான நிறுவனம் தான் “Akasa Air”. ஆரஞ்சு மற்றும் ஊதா நிறத்தில் ‘Its your sky’ என்ற Caption கொண்டு ‘Rising A’ Logoவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ‘Rising A’ என்ற குறியீடு உதய சூரியனின் வெப்பம், ஒரு பறவையின் சிரமமின்றி பறக்கும் தன்மை மற்றும் ஒரு விமான இறக்கையின் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது” என்று அந்நிறுவனம் கூறியது.

இதையும் படியுங்கள் : சினோவாக் தடுப்பூசிக்கு முன்பதிவு தேவையில்லை

துபாய் நடைபெற்ற ஏர் ஷோவில், ஆகாசா ஏர் நிறுவனம் சுமார் 70-க்கும் அதிகமான போயிங் 737 மேக்ஸ் பயணிகள் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இது உலகளவில் மேக்ஸ் விமானத்திற்கான மிகப்பெரிய ஆர்டர்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் 2022ம் ஆண்டு செயல்படத் தொடங்கும் வகையில், இந்த விமான நிறுவனம் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் DGCA ஆகியவற்றிடமிருந்து NOC (Non Objection Certificate) பெற்றுள்ளது.

SNV ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் கீழ் பறக்கும் ஆகாசா, இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்க, 2022 கோடைகாலத்தை இலக்காகக் கொண்டதாக ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் விமானங்களை இயக்க ஆகாச ஏர் நிறுவனம் ஏற்கனவே தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த நிறுவனம் சுமார் 70 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏர்பஸ்ஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஸ்கேரர், ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்திற்காக ஆகாசாவுடன் உரையாடி வருவதாகக் கூறியிருந்த நிலையில், துபாய் ஏர் ஷோவில், சுமார் 70-க்கும் அதிகமான போயிங் 737 விமானங்களை இது ஆர்டர் செய்துள்ளது. “நாட்டின் மிகவும் நம்பகமான, மலிவு மற்றும் பசுமையான விமான நிறுவனமாக இருக்கும் முயற்சியுடன்” இந்தியா முழுவதும் விமானங்களை வழங்க ஆகாசா ஏர் திட்டமிட்டுள்ளது. ஆனால் இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், சாத்தியமான அளவில் விமான பயணிகளை ஈர்க்கும் வகையில் மிக குறைந்த கட்டண விமான நிறுவனத்துடன் முக்கிய உள்நாட்டு வழித்தடங்களுக்கு அகசா சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts