தென்னிந்திய காலை உணவு வகைகளில், இட்லிக்கு தனி இடம் உண்டு. இந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லி, சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆரோக்கிய நிபுணர்கள் இதனை இவ்வாறு விளக்குகின்றனர்:
1 இட்லியில் சுமார் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து மற்றும் 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதனால், இது உடல் எடையை கட்டுப்படுத்தவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது.
உணவகங்களில் இட்லி சாப்பிடுவது புற்றுநோயை உண்டாக்குமா? கர்நாடக அரசின் அதிர்ச்சி தகவல்
கர்நாடக அரசு வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின் படி, உணவகங்களில் விற்கப்படும் இட்லியில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென் இந்தியாவின் பிரபலமான காலை உணவான இட்லி சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை கர்நாடக சுகாதாரத்துறை ஆய்வு செய்தது. ஆய்வின் பகுதியாக, மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, புற்றுநோய் உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள ரசாயனங்கள் கண்டறியப்பட்டதாக முதற்கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
பெரும்பாலான கடைகளில் இட்லி துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சூடுபடுத்தும் போது பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து ‘carcinogenic’ என்ற ரசாயனம் வெளியேறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ‘carcinogenic’ என்ற ரசாயனம் டையாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற ரசாயனமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரசாயனங்கள் உணவில் சேர்ந்து, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகளை உருவாக்குகின்றன.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆய்வக முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் சாலையோர கடைகள் மற்றும் பிற உணவகங்களில் உணவுகள் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். சுகாதார விதிகளை பின்பற்றாத உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Google Pay: இனி இலவசம் இல்லை – கட்டணம் செலுத்த வேண்டிய பரிவர்த்தனைகள்!
கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சரின் பேச்சு:
முழுமையான தடை: உணவக தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
பொதுமக்களின் பங்கு: பிளாஸ்டிக் ஷீட்டில் இட்லி மாவு ஊற்றி வேகவைப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்தால், அவற்றை உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு வர பொதுமக்கள் முயற்சி செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.