TamilSaaga

வெறிச்சோடிய ஏர்போர்ட்.. வெறும் 2 பயணியுடன் சென்னையில் இருந்து கிளம்பிய விமானம்

இந்தியாவில் கொரோனா 3வது அலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்த 3வது அலைக்கு முன்பாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினம் 170 – 180 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் தோராயமாக 30 ஆயிரம் – 40 ஆயிரமாக பயணிகள் எண்ணிக்கை இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று முழு ஊரடங்கால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது. மிக மிக குறைந்த அளவில் மட்டுமே விமான சேவைகள் இருந்தன.

மேலும் படிக்க – பிரதமர் லீ – இந்தோனேசிய அதிபர் சந்திப்பு.. 3 முக்கிய ஒப்பந்தம் கையழுத்து – 76 ஆண்டுகால பிரச்சனைக்கு “முற்றுப்புள்ளி”

சென்னையில் இருந்து தூத்துக்குடி கிளம்பிய விமானத்தில் 9 பயணிகளும், மதுரை கிளம்பிய விமானத்தில் 12 பயணிகளுமே இருந்தனர். திருச்சி விமானத்தில் 14 பேரும், மைசூர் கிளம்பிய விமானத்தில் 16 பேரும் பயணித்தனர்.

இதில் சென்னையில் இருந்து கர்னூல் சென்ற விமானத்தில் வெறும் 2 பேர் மட்டுமே பயணித்தனர். அதேசமயம், கோவை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட விமானங்களில் பயணிகள்கூட்டம் வழக்கம்போல இருந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts