துரித உணவுகளின் ஆதிக்கம் உலக அளவு பல நாடுகளில் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்த தொற்று நோய் காலத்தில் பண்டைய உணவு முறைக்கு மக்கள் பெரிய அளவில் திரும்பிய அதேநேரத்தில் இந்த துரித உணவுகள் மீதுள்ள மோகமும் இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி, உள்ளூர் உணவகத்தில் Shawarma சாப்பிட்டதில், “உணவு விஷமாகி” சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்ஹாங்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் உயிர் பிரிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம் சேருவத்தூர் என்ற இடத்தில் தான் நடந்துள்ளது. இறந்தவர் தேவானந்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த சம்பவம் குறித்து காசர்கோடு மருத்துவ அலுவலர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை பிணவருமாறு..
குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர், தேவானந்தாவிற்கு சிகிச்சை அளித்தும் அது பலனிக்காமல் அவர் உயிரிழந்ததாக கூறினார். மேலும் 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளது” என்று அவர் கூறினார். மேலும் சில மாணவர்கள் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுவதால் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தேவானந்தா இறந்த செய்தி கேள்விப்பட்டது, shawarma விற்று வந்த அந்த கடையை அப்பகுதி மக்கள் கற்கள் வீசி தாக்கியுள்ளனர். மேலும் அந்த ஹோட்டல் பயன்படுத்திய ஒரு 4 சக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்துள்ளனர்.
ஒரு உயிரை காவுவாங்கிய அந்த Sharwamaஐ ஆய்வு அனுப்பியுள்ளதாகவும், இது சம்மந்தமாக ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.