TamilSaaga
Ayurvedic Medicine Recalled After Woman Hospitalized Due to Lead Toxicity

சிங்கப்பூரில் ஆயுர்வேத மருந்துகளில் மோசடி: பொதுமக்கள் எச்சரிக்கை!

சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) ‘அயுர்வேதிக் மெடிசின் மகாயோக்ராஜ் குகுலு’ என்ற அயுர்வேத மருந்துகளை பறிமுதல் செய்துள்ளது. ஒரு பெண் இந்த மருந்தை பயன்படுத்தியதால் ஈயம் (லெட்) நச்சுத்தன்மை ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த மருந்து யூனியன் யோகா அயுர்வேதாவில் முதுகு வலிக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. HSA மேற்கொண்ட பரிசோதனையில், இந்த மருந்தில் ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 6,000 மடங்கு அதிகமாக இருந்தது.

30 வயதுடைய ஒரு பெண், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென சோர்வுற்றதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், நெஞ்சில் வலி உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முதுகு வலிக்காக யூனியன் யோகா ஆயுர்வேதா நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆயுர்வேத மருந்தைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த மருந்தில் அனுமதிக்கப்பட்ட ஈயத்தின் அளவை விட 6,000 மடங்கு அதிகமான ஈயம் கலந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், ஒரு குடும்பம் ‘லாக்டோஜிஜி’ (LactoGG) என்ற ப்ரோபயாட்டிக் மருந்தை வாங்கி பயன்படுத்தியதில், அவர்கள் உடல்நலக் குறைபாடுகளை சந்தித்தனர். கணவன் மற்றும் மனைவி வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை அனுபவித்தனர். அவர்களின் இரண்டு வயது குழந்தைக்கு அதிகப்படியான காய்ச்சல் மற்றும் இயல்பற்ற நிறமுள்ள மலம் ஏற்பட்டது. இந்த மருந்து Shopee என்ற ஆன்லைன் விற்பனை தளத்தில் இருந்து வாங்கப்பட்டது.

குடும்பத்தின் மற்ற குழந்தைகள், இந்த மருந்து வழக்கமாக பயன்படுத்தியதிலிருந்து வேறுபட்ட சுவையைக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். குடும்பத் தலைவர், மருந்து பொதியில் அச்சிடப்பட்ட எழுத்துகளில் சீரற்ற தன்மைகள் மற்றும் காப்ஸ்யூல்கள் உள்ளடக்கத்தில் நிறமாற்றம் இருப்பதை கவனித்தபின், அது போலி என சந்தேகித்தார். சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மேற்கொண்ட பரிசோதனையில், இந்த மருந்துகளில் குறிப்பிடப்பட்டிருந்த Lactobacillus Rhamnosus GG என்ற ப்ரோபயாட்டிக் ஸ்டிரெய்ன் இல்லையென கண்டறியப்பட்டது. HSA, Shopee-க்கு இந்த போலி மருந்து விளம்பரங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளது.

இந்த சம்பவம், பாரம்பரிய மருந்துகள் எனக் கூறி விற்பனை செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. பொதுமக்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

அயுர்வேத மருந்துகளை வாங்கும் போது, அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்துவது முக்கியம். சந்தேகமான அல்லது சான்று இல்லாத மூலிகை மருந்துகளை வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். உடல் நலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

 

Related posts