TamilSaaga

“உரிய ஆவணங்களுடன் வரலாம்” – இந்தியாவை சிவப்பு மண்டல பட்டியலில் இருந்து நீக்கிய பிரான்ஸ்

தற்போது இந்தியாவில் பெருந்தொற்று வழக்குகள் குறைந்துவிட்டதால், இந்தியாவை சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்த பிரான்ஸ் தற்போது அதனை நீக்கியுள்ளது. பிரஞ்சு அரசாங்கம் தங்களது நாட்டிற்குள் தொற்று பரவலை குறைக்க, தொற்று பரவல் அதிகமுள்ள நாடுகளை சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் நோய் பரவல் குறைந்து வருவதால் அந்த தடையை தற்போது நீக்கியுள்ளது பிரான்ஸ்.

இந்நிலையில் இந்த செய்தி வெளியான பிறகு, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள VFS மையங்கள் இப்போது திறக்கப்பட்டு அனைத்து விசா வகைகளையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் குழந்தைகளுக்கும் எந்தவிதமான தனிமைப்படுத்துதலும் பிரான்ஸ் நாட்டில் இருக்காது.

இந்தியர்கள் பிரான்ஸ் வருவதற்கு என்னென்ன செய்யவேண்டும்.

3 முதல் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் சி-வகை ஷெங்கன் விசாவை வைத்திருக்கும் முழு தடுப்பூசி போட்ட பயணிகள், பிரான்சுக்கு எந்த தடையும் இல்லாமல் பயணிக்க முடியும். ஆனால் பயணிகளுக்கு EMA- அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் தடுப்பூசி போட வேண்டும். அவை Pfizer/ Comirnaty, Moderna, AstraZeneca/Vaxzevria/Covishield ஆகியவை ஆகும்.

பயணிகள் தங்களது இரண்டாவது தடுப்பூசி போட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு பயணிக்க வேண்டும்.

பயணிகள் தடுப்பூசி போட்டதற்கு ஆதாரம் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு எந்த தொற்று அறிகுறிகளும் இல்லை என்பதற்கு ஆதாரம் வைத்திருக்க வேண்டும்.

‘Talent பாஸ்போர்ட்’ உள்ளவர்கள், (மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்) கட்டாய காரணங்களின் பட்டியலில் வருகிறார்கள். எனவே அவர்கள் பிரான்ஸ் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை மற்றும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை ஆன்டிஜென் பரிசோதனையை சமர்ப்பிக்கவேண்டும்.

Related posts