சென்டோசா தீவு சிங்கப்பூருக்கு தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு ரிசார்ட் ஆகும். இதில் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் விடுமுறையை கழிக்க தேவையான அத்தனை விஷயங்களும் இடம்பெற்றிருக்கிறது. இந்த சென்டோசா தீவு முந்தைய காலங்களில் அதாவது உலகப் போர் நடைபெற்ற காலங்களில் இது பிரிட்டிஷ் மிலிட்டரி கோட்டையாக இருந்தது. தற்போது இது ஒரு ரிசார்ட் தீவாக மாறி இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்நாட்டு அதாவது சிங்கப்பூரை சேர்ந்தவர்களும் தங்களுடைய விடுமுறை நேரத்தை கழிக்க ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இது ஒரு தீவு ரிசார்ட் இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக கழிக்க எண்ணற்ற ஆக்டிவிட்டீஸ் எங்கே இருக்கிறது. இங்கு செலவிடப்படும் நேரங்கள் உங்களுக்கு மறக்க முடியாத ஞாபகங்களை கொடுக்கும். இந்த பதிவில் சென்டோசா தீவிற்கு எப்படி செல்ல வேண்டும்? எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும். என்னென்ன ஆக்டிவிட்டீஸ் அங்கு இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
இந்த சென்டோசா ஒரு தீவு என்பதால் இதை சுற்றி ரம்யமான கடல், கடல் அலைகள் நம்மை மெய்மறக்க வைக்கும். பொதுவாக சென்டோசா என்றால் மலாய் மொழியில் அமைதி என்பது பொருளாகும். இந்த இடத்தில் அமைதி மற்றும் ஆரவாரங்களையும் பார்க்கலாம்,. நீங்கள் அமைதியை விரும்புவர் என்றால் அதற்கான ஆக்டிவிட்டீஸை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது உங்களுடைய தேர்வு ஆரவாரத்துடன் உங்களுடைய விடுமுறையை கழிக்க வேண்டும் என்றால் அதற்கான ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்டிவிட்டீஸ் இருக்கிறது. இப்போது, சென்டோசா தீவிற்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உள்ளூர் பயணிகள் அதாவது சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் இந்த சென்டோசா தீவிற்கு செல்வதற்கு மெம்பர்ஷிப் கார்டு இருக்கிறது. இந்த மெம்பர்ஷிப் கார்டை நீங்கள் வாங்கி விட்டால் வருடத்தில் 365 நாட்களும் நீங்கள் சென்டோசா தீவிற்கு சென்று வரலாம். அதோடு இலவச பார்க்கிங் வசதியும் பெறலாம். இந்த மெம்பர்ஷிப் பெறுவதற்கு நீங்கள் சென்டோசா இணையதளத்தில் சென்று உங்களுக்கான அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர் அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது கார்டு மூலமாகவோ செலுத்தலாம். அடுத்தது கார், டாக்ஸி, பஸ் ஆகியவை மூலமாக செல்லலாம். உங்களுடைய கார், டாக்ஸி எடுத்து செல்கிறீர்கள் என்றால் அதற்கு என கட்டணம் உண்டு. நீங்கள் தீவிற்குள் சென்டோசா கேட்வே மூலம் உள்ளே நுழைந்தவுடன் உங்களுடைய கார்டில் இருந்து பணம் எடுக்கப்படும். கார் மற்றும் டாக்ஸி உள்ளே வருவதற்கு இரண்டு டாலர்கள் மற்றும் ஆறு டாலர்கள் வசூலிக்கப்படும் இவை உள் நுழையும் நேரங்களை பொறுத்து மாறுபடும். மினி பஸ்சில் பயணிக்க 20 டாலர்களும், கோச்சில் பயணிக்க 40 டாலர்களும் ஆகும். அது மட்டுமின்றி பார்க்கிங் தனியாக கட்டணங்கள் உண்டு. அது இந்த சென்டோசா கார் பார்க்கிங் ஏரியாவில் எலக்ட்ரிக் சார்ஜிங் பாயிண்ட் இருக்கிறது 24 மணி நேரம் இயங்கும். எனவே வெளியே இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளும் இருக்காது.
அடுத்தது என்ன என்ன ஆச்சரியமூட்டும் ஆக்டிவிட்டீஸ் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் நாம் பார்ப்பது forbidden forest. நீங்கள் அல்லது உங்களுடைய நண்பர்கள் யாருக்கும் ஹாரிபாட்டர் என்ற கதாபாத்திரத்தின் மேல் ஈர்ப்பு இருக்கிறதா? அப்படி என்று நீங்கள் செல்ல வேண்டிய முதல் இடம் இந்த forbidden forest. இங்கு மந்திர உலகத்தை உங்களால் உணர முடியும். ஹாரி பாட்டர் படங்களில் வரும் அனைத்து விதமான கதாபாத்திரங்களும் அது சார்ந்த விஷயங்களும் இங்கே இருக்கும். இது மட்டுமின்றி உலகப் பிரசித்தி பெற்ற பல மாயாஜால நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்கள் இங்கே நீங்கள் கண்டு களிக்கலாம். இது உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும். முக்கியமாக மாயாஜால மந்திர தந்திர விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயமாக இந்த இடத்தை தவற விடக்கூடாது. அடுத்தது Sentosa Universal Studios, உலகில் உள்ள ஆறு யுனிவர்சல் ஸ்டூடியோக்களில் இது ஒரு ஸ்டூடியோவாகும். இங்கு 28 புதுவிதமான ரைடுகளை நீங்கள் அனுபவிக்கலாம். இங்கு இருக்கும் ரோலர் கோஸ்டர் உங்களுக்கு சிலிர் போட்டு அனுபவத்தை கொடுக்கும். ஹாலிவுட் மற்றும் நியூயார்க் சார்ந்த விஷயங்களை இங்கு நீங்கள் பார்க்கலாம்.
நீர் விளையாட்டுகள் நிறைந்த Adventure Cove Waterpark உங்களுக்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீரில் விளையாடுவதை விரும்பாதவர்கள் யாரும் இலர். நிச்சயமாக தவறு விடக்கூடாது ஒரு இடங்களில் இந்த Cove Waterpark இடம்பெறும். அடுத்தது underwater world , இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த இடத்தில் நீங்கள் நுழைந்து விட்டால் கடலுக்கு அடியில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும். நிஜத்தில் கடலுக்கு அடியில் சென்றால் என்னென்ன விஷயங்களை பார்க்கலாம் என்பதை இங்கு சென்றால் உங்களால் உணர முடியும். மீன்களில் இருந்து அனைத்து விதமான கடல் வாழ் உயிரினங்கள் இங்கு இருக்கின்றது. குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் இங்கு இருக்கின்றது. 1000க்கும் அதிகமான உயிரினங்கள் இந்த இடத்தில் பாதுகாக்கப்படுகின்றது. நிஜத்தில் நீங்கள் பார்க்க முடியாத சில உயிரினங்களை கூட இங்கு பார்க்க முடியும். Floating aqua park இதுவே சிங்கப்பூரின் முதல் ப்லோட்டிங் பார்க் ஆகும் . இங்கு கடலில் ஓடுவதற்கு, சளிக்கு விளையாடுவதற்கு குதிப்பதற்கு நிறைய நீர் ஊட்டப்பட்ட தடைகள் உள்ளன. உங்களுக்கு கடலில் விளையாடும் அனுபவத்தை கொடுக்கும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு 22 டாலர்கள் குறைந்தபட்சம் செலவாகும். அடுத்தது வண்ணமயமான ஒளிக்காட்சி நீரூற்று கூட இந்த ஒளி காட்சி ஒரு புதுவிதமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். உலகில் ஒரு சில நாடுகளிலே இந்த வகையான நீரூற்று ஒளி காட்சி இருக்கிறது. அந்த வகையில் இதுவும் ஒரு சிறந்த இடமாக சென்டோசா தீவில் கருதப்படுகிறது. இரவில் இந்த ஒளிக்காட்சி ஒரு ரம்யமான ஒரு மயக்க நிலையை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் இல்லை. Gamified electric go-kart, கேமர்ளுக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும். இது ஒரு எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கம் இடமாகும் 40லிருந்து 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். virtual reality வசதிகளும் இங்கு இருக்கும். சாகசத்தை விரும்புபவர்கள் இந்த இடத்தை நிச்சயம் தவறவிடக்கூடாது.
Trickeye Museum கொரியாவில் இருந்து உருவான இந்த அருங்காட்சியகம் ஒரு இன்டர்ராக்டிவ் மியூசியம் ஆகும். நீங்கள் அதனுள் சென்று அதை அனுபவிக்க முடியும். அந்த அங்கு இருக்கும் பெயிண்டிங் மற்றும் ஓவியங்களில் உங்களால் உங்களை அனுபவிக்க முடியும். அதுமட்டுமின்றி இன்னும் வேற என்னென்ன விஷயங்கள் இந்த சென்டோசா தீவில் இருக்கிறது என்பதை பார்க்கலாம், பீச் கிளப், ஆசியாவின் தென்முனை பகுதியை இங்கு பார்க்கலாம். Zip line ஆக்டிவிட்டீஸ் இங்கு இருக்கிறது , இதில் 36 பெரிய மரங்களை தாண்டி 450 மீட்டர் தொலைவு செல்கிறது உங்களுக்கு இருக்கும் டார்சனை இது தட்டி எழுப்பும். 360-degree panoramic ride மற்றும் மலைப்பகுதியில் செய்யப்படும் sky rides ஒரு வினோதமான அனுபவத்தை கொடுக்கும். கேபிள் கார் மற்றும் பஞ்ஜி ஜம்பிங் உங்களை நீங்களே குழந்தையாக நினைக்கும் அளவுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இந்த பஞ்ஜி ஜம்பிங் 40 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் ஒரு நிகழ்வாகும். இது போன்ற சாகச நிகழ்வுகளுக்கு தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்படும். அதனால் கவலையின்றி சுற்றுலா பயணிகள் இதை அனுபவிக்கலாம்.
iFly Singapore உங்களுக்கு 12000 தில் இருந்து 3000 அடி வரை விழும் அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். நிச்சயம் மனதில் தைரியம் மற்றும் பொழுது இருப்பவர்கள் மட்டுமே இதை முயற்சி செய்ய வேண்டும். சாகச பிரியர்களுக்கு இது ஒரு சவாலான செயலாகும். நீங்கள் நிச்சயம் தவறு விடக்கூடாது இன்னும் சில இடங்களை பார்க்கலாம், Madame Tussauds மெழுகு அருங்காட்சியகம், மேஜிக்கல் ஷோர், ஆகியவை ஆகும். தவிர பல விதமான உணவுகளும், ஷாப்பிங் இடங்களும் இங்கு நிறைந்து இருக்கின்றன. நிச்சயமாக உங்களுக்கு ஒரு நாள் இவை அனைத்தும் எக்ஸ்ப்ளோர் செய்ய பத்தாமல் போகலாம். எனவே, நீங்கள் நிச்சயம் எந்தெந்த சாகச ஆக்டிவிட்டி அனுபவிக்க வேண்டுமோ அதை சரியாக தேர்வு செய்து உங்களுடைய நாள் பொழுதை களிப்புடன் அனுபவியுங்கள். இந்த பதிவை படித்த, வாசகர்களே இந்த விடுமுறைக்கு சென்டோசா தீவிற்கு போகலாமா ?