URA எனப்படும் Urban Redevelopment Authority (URA) சிங்கப்பூர் Marina Bay மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வண்ண விளக்கு அலங்காரங்களைக் கொண்ட நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். I- Light என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு முதன் முதலில் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10-வது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு இன்றிலிருந்து அதாவது மே-31 முதல் ஜூன்-23 வரை நடக்கிறது.
Sustainability குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இதனை சிங்கப்பூர் அரசாங்கமும், பல பன்னாட்டு தொழில் நிறுவனங்களும் இணைந்து நடத்துகிறது. காண்போரைக் கவரும் விதத்தில் அமைக்கப்படும் இவை Environment Friendly-ஆன விளக்குகளைக் வடிவமைக்கப்படுகிறது.
கடலோரப் பகுதிகளான Marina Bay, South Beach, Millenia Walk and Tanjong Pagar போன்ற இடங்களில் இந்த வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 11 நாடுகளைச் சார்ந்த மொத்தம் 25 கலைஞர்களால் இவை உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 17 வகையான அலங்கார விளக்குகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன.
அதற்கான விபரங்கள் மற்றும் மேப்-க்கு கீழே உள்ள லிங்க்-கை க்ளிக் செய்யவும். https://www.ilightsingapore.gov.sg/files/i_Light_Singapore_Festival_Map__1_.pdf எந்தெந்த விளக்குகள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய இந்த மேப்-பை பயன்படுத்தலாம்.
பொதுமக்கள் அனைவருக்கும் இதனைக் காண இலவச அனுமதி உண்டு. சில நிகழ்வுகளுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும். வண்ண விளக்கு அலங்காரங்கள் தவிர பார்வையாளர்களை கவர மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://www.ilightsingapore.gov.sg/programmes/
இந்த வருடத்தின் கருப்பொருள் Cyclical Nature! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மறுபயன்பாட்டைக் குறித்த விழிப்புணர்வே இந்த வருட கருப்பொருள். இதுபோன்ற பொருட்களை மறுபயன்பாடு செய்வதன் மூலம் இயற்கையான பசுமையை பாதுகாக்கலாம் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது.
Alibaba Cloud, Marina Bay Sands போன்ற பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இந்த நிகழ்வுக்காக இணைந்துள்ளன. அனைவரும் இதில் இலவசமாக பங்குகொள்ளலாம்.
வண்ண விளக்குகளின் காட்சிகள் மாலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று URA நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்ததாக ரோப் கார்-களில் கொண்டுவரப்பட்ட அழகிய மாற்றம். SCC எனப்படும் Singapore Cable Car, Mount Faber Peak-ல் இருந்து Sentosa வரை செல்லும். கேபிள் கார்களில் சிங்கப்பூரின் அழகைக் கண்டு ரசிக்க மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்பது வழக்கம். தற்பொழுது இந்த SCC அமைக்கப்பட்டு 50 வருடம் நிறைவடைந்த நிலையில் அதனைக் கொண்டாட, மிகவும் பிரபலமான கார்ட்டூன் Hello Kitty-ன் படங்களை கேபிள் கார்களில் வரைந்திட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கேபிள் கார்களில் மட்டுமல்லாமற் அந்த பகுதி முழுவதிலும் Hello kitty உருவங்கள், புகைப்படச் சுவர் போன்றவற்றை அமைத்துள்ளது. மேலும் T-ஷர்ட்கள், வாட்டர் பாட்டில்கள் போன்ற பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன.
SCC உடன் இணைந்து Hello Kitty-ம் அதன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளதால், இந்த Collaboration நிகழ்ந்துள்ளதாம். பிப்ரவரி 15-ம் நாள் SCC துவங்கி 50 வருடம் நிறைவடைந்துள்ளது. Hello Kitty கார்ட்டூனுக்கு வருகிற நவம்பர் 1-ம் தேதி 50-வது பிறந்தநாள்.
இந்த கார்களில் பயணிக்க பெரியவர்களுக்கு 35 டாலர்களும், குழந்தைகளுக்கு 25 டாலர்களும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. SCC-ன் அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும் உள்ளது. https://www.mountfaberleisure.com/attraction/singapore-cable-car/
இந்த தீம் கொண்ட கேபிள் கார்கள், ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை இயக்கப்பட உள்ளது. பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த Hello Kitty தீம் கொண்ட ரோப் கார்கள் ஊரை சுற்றிக்காட்ட தற்பொழுது தயாராக உள்ளன!