நடிகர் விஜய் – சஞ்சீவின் ஃபிரண்டஷிப் எப்போதுமே அனைவரையும் கவர்ந்த ஒன்று
சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அன்புடன் சினிமா வரையும் தொடர்கிறது. அந்த நட்பே விஜய்யின் சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவை நடிக்கவும் வைத்தது.
மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சஞ்சீவின் மூச்சுவிடாத அடுக்கடுக்கான தமிழ் அனைவரையும் ரசிக்க வைத்தது. விஜய் எப்படி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறாரோ, அதேபோலவே சஞ்சீவும் சின்னத்திரையில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
சமீபத்தில் மாஸ்டர் படத்திலும் விஜய் நண்பராக நடித்து மாஸ் காட்டினார்.
விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்பதால், அடிக்கடி அவருடனான அன்பை அனைவரிடமும் பகிர்ந்துகொள்வார்.
இவர்களுடன் சேர்ந்து மற்ற நண்பர்களும் அடிக்கடி வெளியே செல்லும் தருணங்கள், நீண்ட பேசிய உரையாடல்கள் என சஞ்சீவ் அவ்வப்போது கொடுக்கும் அப்டேட்டுகள் ரசிகர்களை குஷிப்படுத்திவிடும். ஒருமுறை விஜய் அணிந்திருந்த சட்டையை சஞ்சீவ் ஒருமுறை நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு அணிந்து வர அதையும் கண்டுப்பிடித்து ரசிகர்கள் கேள்விகளால் மொய்த்தனர்.
அதுக்கு சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருமுறை பதில் கூட அலித்திருந்தார்“இந்த சட்டை ஆமாம், இது ஒரே மாதிரியான சட்டைதான். வேலாயுதம் படத்தில் நடித்தபோது நண்பன் விஜய் எனக்கு கொடுத்தது. 8 ஆண்டுகள் கழித்தும் இந்தச் சட்டை எனக்கு ஃபிட்டாக உள்ளது. நண்பேண்டா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
இன்று நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் சிறந்த நண்பர்களை போற்றும் வகையில் இந்த ஃபிரண்ட்ஷிப் பதிவு.