TamilSaaga

‘இனி புதிய அத்தியாயம் தொடங்கும்’ – மனைவி கிரனை விவாகரத்து செய்த ஆமிர் கான்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் தான் ஆமிர் கான். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களுடைய 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆமிர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் இருவரும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து. ஒருவருக்கொருவர் அனுசரித்து மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளோம்.”

“எங்கள் இருவருடைய உறவும் உண்மையான ஒன்றாக வளர்ந்தது, மேலும் எங்கள் இருவரிடத்தில் மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும், அளவுகடந்த பாசமும் இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்புகின்றோம்”.

“ஆகையால் இனி நாங்கள் கணவன் மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் உற்ற துணையாகவும் நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு திடீரென்று எடுக்கப்பட்டது அல்ல. சில காலங்களுக்கு முன்பு நாங்கள் இந்த விவகாரம் குறித்து திட்டமிட்டிருந்தோம்”.

“இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் வந்திருக்கிறது என்று உணர்கிறோம். எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோராக இருந்தோம். இனியும் அவரை ஒன்றாகவே வளர்ப்போம், பாதுகாப்போம். மேலும் எங்களுடைய இந்த முடிவுக்கு எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவளித்ததற்கு நன்றி” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts