சிங்கப்பூரில் வயதான அதிலும் படுத்த படுக்கையான நிலையில் இருக்கும் பெண்ணைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்த பணிப்பெண், சுமார் ஏழு மாதங்களாக அந்த மூதாட்டியை கொடுமைப்படுத்தியுள்ளார். அலார கடிகாரத்தால் முகத்தில் அடித்து, முடியை இழுத்து, வாயில் அறைந்து என்று பல கொடுமைகளை அந்த மூதாட்டிக்கு செய்துள்ளார். அதன் பிறகு அவர் பிடிபட்டபோது, தனது வேலையளிப்பவர் அதாவது அந்த மூதாட்டியின் மகள் தன்னைத் திட்டியதால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் விரக்தியின் காரணமாக பாதிக்கப்பட்டவர் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.
இதையும் படியுங்கள் : அமேசான், ஃபிளிப்கார்டுக்கு டப் கொடுக்கும் சிங்கப்பூரின் “Shopee”
மியான்மர் நாட்டைச் சேர்ந்த அந்த 39 வயதான ஏய் அய் நாயிங்கிற்கு நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 6) 30 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு பாதிக்கப்படக்கூடிய நபரை தானாக முன்வந்து காயப்படுத்தியதாக மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் மற்றொரு குற்றச்சாட்டும் தீர்ப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
Aye Aye Naing என்ற அந்த பணிப்பெண் பாதிக்கப்பட்டவரின் மகளான 52 வயதுடைய பெண்மணியால் வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும், Yishun-ல் உள்ள ஒரு குடியிருப்பில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்ததாகவும் நீதிமன்றம விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட 76 வயதான பெண், முதுகெலும்பு பிரச்சினைகள் மற்றும் மூட்டுவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார், இதனால் அந்த பணிப்பெண் செய்த காரியங்களில் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி, ஏய் ஏய் நயிங் பாதிக்கப்பட்ட பெண் தனது படுக்கையில் படுத்திருந்த இடத்திற்கு நடந்து சென்று, அவரது முகத்தில் ஒரு குஷனைப் பயன்படுத்தி அடித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மெதுவாக தன் கையை வாய்க்கு நகர்த்தியுள்ளார். ஆனால் ஏய் ஏய் நயிங் பாதிக்கப்பட்டவரின் மூக்கில் அழுத்தி மூதாட்டியின் முகத்தைத் திரும்பத் திரும்பத் குத்தியுள்ளார். மேலும் முகத்தைப் பாதுகாக்க முயன்றபோது பாதிக்கப்பட்டவரின் கையிலும் அவர் அடித்துள்ளார்.