சிங்கப்பூரில் வெளியில் வந்து தடுப்பூசி பெறமுடியாமல் வீட்டில் இருக்கும் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பெருந்தொற்று தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று புதன்கிழமை (நவம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் அவர் கூறியதாவது, “வீட்டில் உள்ள 2,300 நபர்கள் தங்கள் பெருந்தொற்று தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களை பெற்றுள்ளனர்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
முதியோர்கள், குறிப்பாக தடுப்பூசி மையத்திற்குச் செல்ல முடியாதவர்கள் அதிகம் அணுகக்கூடிய வகையில் சிங்கப்பூரின் முக்கிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட மொபைல் தடுப்பூசி குழுக்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டன. மொபைல் தடுப்பூசி முன்முயற்சி சிறியதாகத் தொடங்கினாலும், தற்போது அது வளர்ந்துள்ளது என்று அவர் கூறினார், முதலில் ஆகஸ்ட் மாதத்தில் 11 குழுக்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பரில், இந்த குழுக்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது, இந்த குழுக்களில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள், பான்கேர் மருத்துவ மருத்துவமனை, சாடா காம்ஹெல்த் மற்றும் ஹெல்த்வே மருத்துவக் குழுவில் இருந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் “அனைத்து தடுப்பூசி குழுக்களும் ஒரு பொதுவான பணியைப் பகிர்ந்து கொள்கின்றன, அது பெருந்தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க, தங்களால் இயன்றவரை, குறிப்பாக நமது முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். ஒவ்வொரு தடுப்பூசியும் உயிரைக் காப்பாற்றும்.
இந்த நிஜஉலக ஹீரோக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டார்.