சிங்கப்பூரில் நேற்று சுகாதார அமைச்சர் திரு. ஓங் யி காங் ஒரு செய்தியினை பகிர்ந்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று நீண்ட காலத்துக்கு நிலைக்கும் சூழல் இருக்கிறது. எனவே இதன் காரணமாக வீட்டிற்குள் மக்கள் முடங்கி விடாமல் இனி வரும் காலங்களில் எப்படி இயல்பு வாழ்க்கையை துவங்குவது என்பது தொடர்பான சில வழிமுறைகளை கூறியுள்ளார்.
மக்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் என்ற சந்தேகம் எழுத்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொண்டு தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சுய பரிசோதனை மேற்கொண்டு நிலையை அறந்துகொள்ள வேண்டும்.
சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அவர்களும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் உள்ள நபர்கள் தங்கள் பணி செய்யும் இடங்களில் இதை பற்றி தெரிவித்து மருத்துவ விடுமுறையின்றி வீட்டில் தனிமையில் இருக்க அனுமதிக்கப்படும்.
உடனடியாக கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வராமல் படிப்படியாக செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
“அபாயகரமான சூழலில் படிப்படியாக இதனை செயல்படுத்துதல் முக்கியமானது, நிலைமையில் முன்னேற்றம் உள்ளது என மக்கள் உணரும் வகையில் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக உடனடியாக கட்டுப்பாடுகளை நீக்கி இருக்கும் நிலைமையை இன்னும் மொசமாக்க கூடாது” என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்