TamilSaaga

“சிங்கப்பூரில் வரும் மாதங்களில் உணவின் விளையும் உயர வாய்ப்பு” : அமைச்சர் கன் கிம் யோங் விளக்கம்

சிங்கப்பூரில் ஏற்கனவே ரயில், பஸ் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயரும் என்று கூறிவந்த நிலையில் தற்போது உணவு பொருட்களின் விளையும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உலக உணவுப் பொருட்களின் விலை உயர்வு, விநியோகம் செய்வதில் பெருந்தொற்றல் ஏற்பட்ட தடைகள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியில் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும் என்பதால் வரும் மாதங்களில் சிங்கப்பூரில் உணவுவின் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (நவம்பர் 3) திரு ஷான் ஹுவாங்கின் (ஜூரோங் ஜிஆர்சி) நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் பின்வருமாறு கூறினார், “எரிசக்தி விலைகள் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், உணவு வழங்குநர்கள் விலை அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் விலைகளை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறினார். இறக்குமதி விலைகள், சரக்கு போக்குவரத்து, உழைப்பு மற்றும் பருவகால வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட காரணிகளின் கலவையால் உணவு விலை பாதிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில் “கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன, பொதுவாகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உலகளாவிய பணவீக்க அழுத்தங்களால் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

“சிங்கப்பூர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது மற்றும் அதன் பெரும்பாலான உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்கிறது. எனவே உலகளவில் இந்தப் பொருட்களின் அதிக விலை காரணமாக உள்நாட்டில் அதிக விலைக்கு விற்கப்படும் என்றார். உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பைத் தணிக்க சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் உதவி செய்யும் என்றும் திரு கேன் கூறினார்.

Related posts