சிங்கப்பூரில் 18 மீ வரை நீளம் இருக்கும் என மதிப்பிடப்பட்ட ஒரு மரம், நேற்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 17ம் தேதி அன்று நண்பகலில் எமரால்டு ஹில் சாலையில் நின்றுகொண்டிருந்த வேனில் மீது விழுந்தது. வேனின் கூரை நசுக்கப்பட்டு, கண்ணாடிகள் வளைந்த சம்பவத்தின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஊடக கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:20 மணியளவில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டதாக NParks தெரிவித்துள்ளது. மேலும் 134 எமரால்டு மலை சாலையில் அந்த தஞ்சோங் வகை மரம் அருகில் இருந்த காரின் மீது விழுந்துள்ளது.
சுமார் 15 மீ முதல் 18 மீ உயரம் மற்றும் 2.8 மீ சுற்றளவு கொண்ட மரம் மாலை 4 மணிக்கு அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த நிகழ்வில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இந்த ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் சிங்கப்பூர் மிகவும் அதிகமான ஈரமான நாட்களை எதிர்கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 16) பதினைந்து நாள் முன்னறிவிப்பில் கூறியது. மேலும் சிங்கப்பூரில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.