சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே தமிழக தொல்லியல் துறை சார்பாக கீழடி கொந்தகை அகரம் உள்ளிட்ட இடங்களில் 7 கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொந்தைகையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் போது பல்வேறு வகையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, தாழிகளை ஆவணப்படுத்தும் பணியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியில் சுமார் 77 சென்டிமீட்டர் ஆழத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, 46 சென்டி மீட்டர் நீளம் கொண்ட இரும்பு உலோகத்தாலான ஆயுதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது, அதில் இரும்பு 40 சென்டிமீட்டர், மரத்தால் 6 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது.
மேலும் இந்த ஆயுதம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.