சூர்யா போட்ட பிள்ளையார் சுழி இன்று தமிழ் சினிமாவை சுற்றி சுற்றி அடித்துக்கொண்டிருக்கிறது. லாபம் ஒருபக்கம் நட்டம் ஒருபக்கம்.. ஆதரவும், எதிர்ப்பும் என இன்று வரை ஓடிடி சர்ச்சை குறைந்தபாடில்லை. அதற்கு ஏற்றார் போல் கொரோனா பெருந்தொற்றால் திரையரங்குகள் திறந்த பாடில்லை.
இந்த நேரத்தில் தான் ஓடிடி உள்ளே புகுந்து டாப் ஹீரோ ஹீரோக்களின் படத்தை அள்ளிக்கொண்டு வந்து டிவியில் காட்டி வருகிறது. ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற பெரிய பட்ஜெட் படங்களே நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தனர். இப்போது அடுத்தடுத்து பல தமிழ்ப் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளன.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் மர்டர் மிஸ்ட்ரி திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இன்று நேரடியாக சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நெக்ஸ்ட்?
கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் நரகாசூரன் திரைப்படம் சோனிலிவ் ஓடிடி தளம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகிறது.
நயன்தாரா நடித்துள்ள கொரிய பிளைன்ட் திரைப்படத்தின் தழுவலான நெற்றிக்கண் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோ பெரும் தொகைக்கு இப்படத்தை வாங்கியுள்ளது. நேற்று ட்ரையலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்திருக்கும் படம் கடைசி விவசாயி. விவசாயிகளின் பிரச்சனையை சொல்லும் இந்தப் படத்தை சோனிலிவ் வாங்கியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர். அதே போல் விஜய் சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடித்துள்ள துக்ளக் தர்பார் விநாயகசதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதேதநாளில் படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஹாரர் படம் பூமிகா. இந்தப் படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. அதேநாள் படத்தை நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
மொத்தத்தில் அடுத்த 6 மாதத்திற்கு ஓடிடி ரொம்ப பிஸி!