சிங்கப்பூரில் தற்பொழுது பந்தயப்பிடிப்பு கழகம் மறு தேதி அறிவிக்கப்படாமல் தற்காலிகமாக தங்களுடைய 2 சூதாட்ட கிளைகளை மூடியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த கிளைக்கு சென்று வந்ததை தொடர்ந்து இந்த முடிவினை அந்த கழகம் எடுத்துள்ளது.
Telok Ayer மற்றும் ரோச்சோரியிலும் உள்ள இரண்டு நிலையங்களும் தற்போது மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மூடப்பட்டுள்ள அந்த இரண்டு இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நாளை நடைபெற உள்ளது.
மேலும் தொற்று உள்ளவர்கள் வந்ததாக கருதப்படும் குறிப்பிட்ட அந்த நாட்களில் அந்த இடத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் அந்த சூதாட்டநிலையம் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.
இன்று சிங்கப்பூரில் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதில் சிலருக்கு தொற்று எந்தவித தொடர்பும் இல்லாமல் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் சிங்கப்பூர் அரசு பல தளர்வுகளை அறிவித்தது.