TamilSaaga
Singapore Secures Top Positions in 2024's Busiest Air Routes

2024 பிஸியான விமான பாதைகளின் பட்டியலில் மூன்று இடங்களைப் பிடித்தது சிங்கப்பூர்!

சிங்கப்பூர்: உலகின் மிகவும் பிஸியான விமானப் போக்குவரவு மையங்களில் ஒன்று!

Airports Council International (ACI) அறிக்கையின்படி 2024  இறுதிக்குள் சர்வதேச பயணிகள் போக்குவரத்து 4.1 பில்லியன் ஆக எட்டும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பிஸியான சர்வதேச விமான பாதைகளில் பெரும்பாலானவை ஆசியாவில் உள்ளன. இதில், ஒன்று ஆப்பிரிக்காவில் இருந்து, ஒன்று ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இருந்து, மேலும் இரண்டு பாதைகள் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து உள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ஓஏஜி (OAG) எனப்படும் உலகப் பயணத் தரவுத் தளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பத்து முக்கிய விமானப் பாதைகள் அடங்கிய பட்டியலில், சிங்கப்பூரை மையமாகக் கொண்ட மூன்று வழித்தடங்கள் தேர்வாகி உள்ளன. இவை முறையே 4வது, 8வது மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன.

பட்டியலின் முலிடத்தை The Hong Kong (HKG) to Taipei (TPE) வழித்தடம் பெற்றுள்ளது. அந்த வகையில், முதலிடத்தில் உள்ள ஹாங்காங்-தைப்பே வழித்தடத்தில் இவ்வாண்டு 6.7 மில்லியன் இருக்கைகளை பயணிகள் பயன்படுத்தினர்.

Kuala Lumpur – Singapore விமானப் பாதை பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வழித்தடத்தில் இவ்வாண்டு 5.38 மில்லியன் இருக்கைகள் நிரம்பி பயணிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Jakarta – Singapore வழித்தடம் எட்டாவது இடத்தையும் Bangkok – Singapore வழித்தடம் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன. Jakarta – Singapore இருவழித் தடங்களில் மொத்தம் 4.1 மில்லியன் இருக்கைகள் நிரம்பியுள்ளன. அதேபோல், Bangkok – Singapore இருவழித் தடங்களில் 4 மில்லியன் இருக்கைகளில் பயணிகள் பயணித்துள்ளனர்.

 

Rank Route Seat Capacity
1 Hong Kong – Taipei 6,781,577
2 Cairo – Jeddah 5,469,274
3 Seoul Incheon – Tokyo Narita 5,410,456
4 Kuala Lumpur – Singapore 5,382,163
5 Seoul Incheon – Osaka 4,982,769
6 Dubai – Riyadh 4,306,599
7 Bangkok – Hong Kong 4,201,802
8 Jakarta – Singapore 4,069,071
9 Bangkok – Singapore 4,033,344
10 New York JFK – Heathrow 4,011,235

 

2024ல் உலகளவில் இந்தியாவின் பரபரப்பான உள்நாட்டு விமானப் பாதை எது?

2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் பிஸியான உள்நாட்டு விமான பாதை Mumbai (BOM) – Delhi (DEL) வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 79,63,686 இருக்கைகள் பதிவாகியுள்ளன, இது உலகின் பிஸியான உள்நாட்டு விமான பாதைகளில் ஒன்றாகும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts