TamilSaaga
Kuala Lumpur Singapore High-Speed Rail

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம்: முடிவு விரைவில்!

கனவு ரயில் திட்டம்: சிங்கப்பூர்-கோலாலம்பூர் இணைப்புக்கு விரைவில் வாய்ப்பு!

தென்கிழக்காசியாவின் இரு முக்கிய நகரங்களான சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் அதிவேக ரயில் திட்டம் மீண்டும் தொடங்கவுள்ளது. மலேசிய அரசாங்கம், டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

இந்த திட்டம் நிறைவேறினால், சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான பயண நேரம் குறைந்து, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

350 கி.மீ. கொண்ட இந்த ரெயில் பாதை, குளாலம்பூர், புத்ராஜயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோஹர் ஆகிய முக்கிய நிலையங்களை இணைப்பதற்காக வடிவமைக்கப்படும் . அதிவேக ரயில் திட்டம் நடப்புக்கு வந்தால், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களாக இருக்கும்.

இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டால் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் சமூக உறவுகள் மேலும் வலுப்படும். குறிப்பாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த திட்டத்தின் கட்டுமானம் மற்றும் இயக்கம் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது .

இரு நாட்டு தலைவர்களின் இந்த அறிவிப்பு, இந்த திட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts