ஜூலை மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழை-க்கு வாய்ப்புள்ளது. பொதுவாக மழை காலை முதல் மதியம் வரை பெய்யக்கூடும். வெளியில் செல்லும் மக்கள் தக்க பாதுகாப்புடன் செல்லவது நல்லது.
மேலும் மாலை நேரங்களில் வெப்பநிலை குறைந்து ஈரப்பதத்துடன் காணப்படும். வெப்பநிலை பொதுவாக 32 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ்வரை இருக்கக்கூடும். மாலை நேரத்தில் 28 டிகிரிக்கு மேல் குறையவும் வாய்ப்புள்ளது.
கடந்த ஜூன் கடைசி வாரத்தில் சிங்கப்பூர் முழுக்க மலை மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சம் 122 செ.மீ வரை இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. மழை காரணமாக வெப்பம் மிகுந்த வானிலை சற்று வெப்பம் தணிந்து ஈரப்பதத்துடன் இருந்தது.
ஜூன் 21 அன்று சாங்கி பகுதியில் தான் அதிக மழை பதிவாகியிருந்தது. பொதுவாக 34 டிகிரி செல்சியஸ் உள்ள வெப்பநிலை மழை காரணமாக Admiralty மற்றும் Newton பகுதிகளில் 22.3 டிகிரி செல்சியஸ் வரை தணிந்து காணப்பட்டது.
அடுத்த ஓரிரு வாரங்களுக்கு சிங்கப்பூரில் மழையை எதிர்பார்க்கலாம்! எங்க போனாலும் பாதுகாப்பு முக்கியம் மக்களே!