காதலுக்கு கண்கள் இல்லை என்பது என்னவோ உண்மை தான்! ஆனால் வயதும் தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளனர் சீனாவைச் சேர்ந்த இந்த காதல் தம்பதியினர்!
10 வயது 20 வயது வித்தியாசங்கள் கொண்ட காதல் ஜோடிகளைக் கூட கண்டிருப்பீர்கள்! ஆனால் 60 வயது வித்தியாசம் கொண்ட காதல் ஜோடிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்!
சீனாவைச் சேர்ந்த ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர் 80 வயதான லீ, அதே பகுதியில் ஒரு முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தவர் தான் 23 வயதான சியாஃபாங். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் காதல் மலர்ந்துள்ளது.
ரொம்ப குழப்பமா இருக்கா? தொடர்ந்து படியுங்க!
சியாஃபாங் வேலை பார்த்து வந்த முதியோர் இல்லத்தில் தான் லீ-யும் இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி தங்கள் வாழ்வின் அனுபவங்களைப் பற்றி பேசிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். நாளடைவில் இருவரின் இந்த பேச்சுவார்த்தை நட்பில் முடிய, காலம் செல்லச் செல்ல காதலாக மாறியது.
இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த பின்னர் சியாஃபாங்-ன் பெற்றோர்களிடத்தில் தங்கள் காதலைப் பற்றி தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் இதனை எதிர்க்கவே, தனது குடும்பத்தையும் உதறிவிட்டு லீ-யைக் கரம்பிடித்தார் சியாஃபாங்.
இவர்களின் காதலை வெளிப்படுத்த சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போட்டோ தான் தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது. பலரும் இந்த காதலை ஆதரித்தும், காதலுக்காக சியாஃபாங் உடைத்தெறிந்த தடைகளையும் குறித்து பாராட்டி வருகின்றார்.
மற்றொரு பக்கம் எதிர்மறைக் கருத்துக்களும் எழாமல் இல்லை! சியாஃபாங் தான் தனது மொத்த குடும்பத்திற்கும் பொருளாதார தேவைகளை சந்தித்து வந்துள்ளார். லீ தனது பென்ஷன் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் எனவே பொருளாதாரத்தில் லீ சற்று நிலையாக இருப்பதால் பணத்திற்காக இந்த திருமணம் நடைபெற்றிருப்பதாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் காதல் என்பது அனைத்தையும் கடந்து மனங்களை ஒன்றிணைப்பது தான் என இந்தத் தம்பதியினர் நிரூபித்துள்ளனர்.
உலக அளவில் வயது வித்தியாசங்களைக் கடந்த காதல் புதிதல்ல என்றாலும், நடக்கும் பொழுது அனைவரது கவனத்தையும் ஏற்காமல் இருந்ததில்லை. அதே போல் தான் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது லீ மற்றும் சியாஃபாங்-ன் காதல்!