TamilSaaga

S Pass-ல் வேலை பார்ப்பவர்கள் அடுத்த Renewal வரும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

சிங்கப்பூரில் S-பாஸ் வைத்திருக்கும் பணியாளர்கள் தங்கள் பாஸ்-ஐ ஒவ்வொரு முறையும் Renewal செய்யும் பொழுதும் கீழ்கண்ட காரியங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:

  • உங்கள் S-பாஸ் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்ட வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள S-பாஸ் காலாவதியாகும் 6 மாதத்திற்கு முன்னமே உங்கள் பாஸ் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் உங்கள் பழைய பாஸ்-ன் மீதமுள்ள நாட்கள் எதுவும் குறையாது. முழுதாக உங்கள் பாஸ் காலாவதியான பிறகே புதிய பாஸ் செல்லுபடியாகும்.
  • ஒருவேளை S-பாஸ் புதுப்பிக்கும் பொழுது 3 வருடங்களுக்குள் குறிப்பிட்ட நபரின் பாஸ்போர்ட் காலாவதியாகும் பட்சத்தில் அதற்க்கு 1 மாதம் முன் மட்டுமே விசா புதுப்பிக்க காலக்கெடு வழங்கப்படும்.
  • S-பாஸ் புதுப்பிக்க செலுத்த வேண்டிய கட்டணம் 100 டாலர்கள்.
  • குறிப்பிட்ட நபரின் S-பாஸ் புதுப்பிக்க அவர்களின் வேலை நிறுவனமோ அல்லது ஏஜென்சியோ தான் விண்ணப்பிக்க முடியும்.
  • S-பாஸ் காலாவதியாகும் பட்சத்தில் இயன்றவரை முன்கூட்டியே புதுப்பித்தல் நல்லது. கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்து விட்டால் மீண்டும் புதிய பாஸ்க்கு தான் விண்ணப்பிக்க முடியும்.

S-பாஸ் புதுப்பித்தலுக்கு தேவையானவை:

  • குறிப்பிட்ட நபர் திரும்பவும் S-பாஸ் பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
  • புதுப்பித்தலின் பொழுது குறிப்பிட்ட நபரின் பாஸ்போர்ட் குறைந்தது அடுத்த 7 மாதங்களுக்கு செல்லுபடியாகக் கூடியதாக இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட துறைக்கு போதுமான S Pass ஒதுக்கீடு நிறுவனத்திடம் இருக்க வேண்டும்.
  • S-pass புதுப்பிக்கும் பணியாளருக்கு PCP எனப்படும் Primary Care Plan தேவைப்படும் பட்சத்தில், அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.(Primary Care Plan என்பது 7 பேர்களுக்கு மேல் ஒரே Dormetry-ல் தங்கும் ஊழியர்களுக்காகவும், CMP Sector-களில் பணிபுரியும் ஊழியர்களுக்காகவும் எடுக்கப்படும் அடிப்படை மருத்துவக் காப்பீடு ஆகும். இது நிறுவனம் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்டும்.)
  • S-பாஸ் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்ட பிறகு, பாஸ் கொடுக்கப்படும் முன் 1 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் IPA எனப்படும் In Principle Approval கொடுக்கப்படும்.
  • பாஸ் புதுப்பிக்கப்பட்ட பிறகு EP-eservice Notification Letter-ஐ பார்வையிட வேண்டும். ஒருவேளை அதில் “Continue using the existing card” என இருந்தால் குறிப்பிட்ட நபர் தனது பழைய பாஸ்-ஐ பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் 60 டாலர் கட்டணம் செலுத்தி மாற்று பாஸ்-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • புதிய பாஸ் வழங்கப்பட்ட பிறகு எந்த வித தவறான பயன்படுத்துதலும் இருக்கக்கூடாது என்பதற்காக பழைய பாஸ் இரண்டாக கட் செய்யப்படும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts