நீரிழிவு நோய் அதாவது Diabetes என்பது இன்று வரை உலகின் கோடிக்கணக்கான மக்களை பாதித்திருக்கக்கூடிய ஒரு நாள்பட்ட நோயாகும். ரத்தத்தில் குறிப்பிட்ட அளவை விட சர்க்கரை அதிகரிப்பதே இந்த Diabetes நோயாகும். நாம் உட்கொள்ளும் உணவுகளை உடலுக்கு சக்தியாக மாற்றக்கூடிய செயலில் இன்சுலின் மிக முக்கிய காரணியாகும். குடல் நுண்ணுயிர்களால் இரைப்பையில் க்ளுகோஸ் என்ற சர்க்கரை சுரக்கும். அதனை சக்தியாக மாற்றி உடலுக்கு கொடுக்க இன்சுலின் பயன்படுகிறது. கணையத்தில் சுரக்கும் இந்த இன்சுலின் சரியாக சுரக்காமல் போகும்பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். அதுவே நீரழிவு நோய்க்கு காரணமாகும்.
இதில் மூன்று வகைகள் உண்டு.
- முதல் கட்ட நீரழிவு நோய்
- இரண்டாம் கட்ட நீரழிவு நோய்
- மூன்றாம் கட்ட நீரழிவு நோய்
முதல் கட்ட நீரிழிவு நோயானது சிறுவர் சிறுமியருக்கு ஏற்படக் கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு முழுவதும் தடைபடும்பொழுது நீரழிவு நோய் ஏற்படுகிறது. இவர்கள் தொடர்ச்சியாக இன்சுலின் எடுத்துக் கொள்வதன் மூலம் இதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இரண்டாம் கட்ட நீரழிவு நோயானது வயது வந்தவர்களுக்கு ஏற்பாடக் கூடியது. உலகின் நீரழிவு நோய் பாதித்தவர்களில் 90 சதவீதம் பேர் இந்த வகையைச் சார்ந்தவர்கள். தொடர்ச்சியான மருந்துகள் மற்றும் இன்சுலின் மூலம் இவர்கள் நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
மூன்றாம் கட்ட நீழிவு நோய் பெரும்பாலும் கர்பிணிகளுக்கு ஏற்படக் கூடியது. குழந்தை பிறந்தவுடன் இந்த வகை நோய் குணமாகிவிடும். மேலும் பிற்காலத்தில் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.
இந்த நீரழிவு நோய் காரணமாக உலகில் பல மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். பல கோடி மதிப்பிலான மருந்துகள் இதற்காக தினம்தோறும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனை நாளுக்கு நாள் உட்கொள்வதன் மூலம் பலருடைய நோய் கட்டுப்பாடும் அதிகரித்து உள்ளது. இருப்பினும் இதனை முற்றலிலும் குணப்படுத்துவது இது வரை சாத்தியமற்ற விஷயமாக இருந்து வந்தது.
நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த உலகம் முழுவதும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆராய்ச்சிகளும் மிக நுணுக்கமாக பல வல்லுநர்களால் மேற்கையல்லப்பட்டு வந்தும் இதற்கான நிரந்தர தீர்வு கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.
ஆனால் தற்பொழுது நீரிழிவு நோயிலிருந்து முற்றிலும் சுகம் தரக்கூடிய ஒரு மருந்தை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
2021-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து, நீரழிவு நோய் உள்ள ஒருவருக்கு செலுத்தப்பட்டது. மருந்து செலுத்தப்பட்ட சில நாட்களில் அந்த நோயாளி இன்சுலின் ஊசிகளை எடுத்துக் கொள்வதை நிறுத்தினார். பின்னர் அடுத்த வருடத்தில் மிதமாக மருந்துகளை உட்கொள்வதையும் நிறுத்தி உள்ளார். தற்பொழுது வரை மேலும் எந்த மருந்துகளும் உட்கொள்ளாமல் சாதாரணமாக இருந்து வருகிறார். இதன்மூலம் நீரிழிவு நோய்க்கான நிரந்தர மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் சாங்ஜெங் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தான் அந்த மருத்துவம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த கண்டுபிடிப்பைக் குறித்த அறிவிப்பு செல் டிஸ்கவரி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
25 வருடங்களாக இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயது நிறைந்த நோயாளிக்கு இந்த மருத்துவம் வழங்கப்பட்டது.
ஸ்டெம் செல் மூலம் உற்பத்தியாகும் pancreatic cells-களை மாற்று அறுவைசிகிச்சை மூலம் செலுத்துவதே இந்த மருத்துவமாகும். இந்த அறுவை சிகிச்சையானது 2021ல் அந்த நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து 11 வாரங்களுக்குள் அவர் இன்சுலின் ஊசிகளை போட்டுக்கொள்வதை தவிர்த்தார். மேலும் தொடர்ச்சியான மருந்துகளை உட்கொண்டிருந்த அந்த நோயாளி ஒரு வருடத்தில் முற்றிலும் நீரிழிவுக்கான மருத்துவத்தை நிறுத்தினார்.
அவரை தொடர் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் 33 மாதங்களாக அவர் நீரிழிவு நோயிலிருந்து குணமடைந்து ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்தனர் . இந்த கண்டுபிடிப்பானது மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். உலகிலேயே அதிகம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீன மக்கள் தான்! ஏறத்தாழ 140 மில்லியன் மக்கள் அங்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இது போன்ற மருத்துவ கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.