TamilSaaga

ஓய்வில்லாமல் உழைக்கும் நம் தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகர்களுக்கு உற்சாகம் கொடுப்பதற்காக அமுதசுரபியென அன்பளிப்பு மழை!

பல கனவுகள், சில கடமைகள், சில கடன்கள், சில கருத்து வேறுபாடுகள் என பல விஷயங்களை மனதில் சுமந்து கொண்டு சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினர் பலர், இங்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என நினைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் பல தேசங்களிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த வண்ணம் தான் இருக்கின்றனர் மக்கள். ஆனால் இங்கு வந்த பிறகுதான் ஒரு விஷயம் புரியும், இங்கு தான் வாழ்க்கையே தொடங்குகிறது என்று…புதிய மக்கள், புதிய இடம், புதிய வேலை என ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டு ஓட ஆரம்பிக்க நினைக்கும் பொழுது இரண்டு வருடங்கள் ஓடி முடிந்து விடும். சிங்கப்பூர் வந்த வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தங்களது முயற்சியாலும், தனித்துவமான திறமையாலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கின்றனர். சிலர் சிங்கப்பூரில் இருக்கும் கவர்ச்சிகரமான விஷயங்களுக்கு அடிமையாகி அவர்கள் வாழ்வை தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோக இன்னும் சிலரும் உள்ளனர், பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொண்டது போல இங்கு இருக்கவும் முடியாமல் சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாமல் இதுதான் விதியோ என்று காலத்தை கடத்துபவர்களும் உண்டு. இப்படி பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையான சிந்தனைகளுடன் ஒவ்வொரு நாளும் விடியலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு, உற்சாகத்தை கொடுக்கும் நம்பிக்கையோடு ஒவ்வொரு மாதமும் எங்களால் முடிந்த இலவச பரிசு பொருட்களை கொடுத்து, கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு உந்துவிசையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு கொடுத்து வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இந்த பணி தற்போது வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அன்பளிப்பு பொருட்களை அறிவிக்கும் பொழுது நமது வாசகர்கள் சுமார் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரம் நபர்கள் வரை அப்ளை செய்கிறார்கள், அதிலிருந்து பத்து வாசகர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் தான் என்றாலும் அந்த 10 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அன்பளிப்புகளை கொடுத்து அவர்களோடு சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அத்தருணம் வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, தமிழ் சாகா பெருமையாக உணர்கிறது.
இலவச பொருட்களை பெற்றவர்கள் சந்தோசமாக அவருடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள், பரிசு பெறாதவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தமிழ் சாகா வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையும் கொடுப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. ஆகவே தமிழ் சாகா வாசகர்களே தொடர்ந்து ஆதரவை கொடுங்கள் அன்பளிப்புகளை பெறுங்கள். அன்பையும் அன்பளிப்புகளையும் பகிர்ந்து கொண்டு ஒரு மகிழ்ச்சியான வாழ்வையும் சேமிப்பையும் இந்த சிங்கப்பூர் மண்ணில் சேகரிப்போம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts