TamilSaaga

இந்தியாவில் உள்ள Testing Centre- கள் Approved ஆனதா என்று எப்படி check செய்வது?

சிங்கப்பூர் : இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்பவர்கள் டெஸ்ட் அடித்திருக்க வேண்டும். சிங்கப்பூர் சென்ற பிறகும் டெஸ்ட் அடிக்கலாம் என்ற விபரம் பலருக்கும் தெரிவது கிடையாது. இந்தியாவில் டெஸ்ட் அடித்து விட்டு, சிங்கப்பூர் செல்வதை விட, work permit அல்லது work pass மூலம் சிங்கப்பூர் சென்று விட்டு, பிறகு அங்கு BCA வால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேர்ந்து டெஸ்ட் அடிப்பதற்கு குறுகிய காலம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதாக இருந்தால் அதன் சான்றிதழ் கிடைப்பதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு இந்தியாவில் திறன் பயிற்சி மையங்களில் சேர்ந்து, டெஸ்ட் அடிப்பதற்கான மையங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் இவற்றில் நாம் சேரும் பயிற்சி மையம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள சிலர் தவறி விடுகிறார்கள். அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையம் தானா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொண்டால் போலி மையங்களை நம்பி பணத்தையும், காலத்தையும் இழப்பதை தவிர்க்க முடியும்.

நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு திறன் பயிற்சி மையத்தில் சேர போகிறீர்கள் என்றால், அந்த நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், tnskill.tn.gov.in/ta/ என்ற அரசு இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் விபரங்கள் கொடுத்திருப்பார்கள். இந்த இணையதளத்திற்கு சென்று பயிற்சி நிறுவனம் என்ற மெனுவை கிளிக் செய்தால், அதில் மாவட்டம், துறையின் பெயர், பயிற்சி பங்குதாரர் என மூன்று விதமான பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். மூன்றில் உங்களுக்கு தெரிந்த அல்லது தேவையான பிரிவை கிளிக் செய்தால் அதற்கு கீழே பயிற்சி மையங்கள் அதன் முகவரி உள்ளிட்ட விபரங்களின் பட்டியல் வந்து விடும்.

இந்திய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் msde.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று சரி பார்த்துக் கொள்ளலாம். இது இந்திய திறன் மேம்பாட்டு மற்றம் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதே போல் சர்வதேச அளவிலான படிப்புகள் மற்றும் பயிற்சிகள் குறித்த விபரங்களை nsdcindia.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts