TamilSaaga

உலக அளவில் உயரும் இந்திய விஞ்ஞானிகளின் மதிப்பு… இன்று மாலை ஆதித்யா விண்கலம் நிகழ்த்தவிருக்கும் சாதனை… !

சில நாட்களுக்கு முன்பு சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி உலகத்தில் இதுவரை யாரும் எட்டாத சாதனையை செய்து காட்டியது இந்தியா. இந்நிலையில் அடுத்த கட்ட முயற்சியாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பியது. இதுவரை பல உலக நாடுகள் சூரியனுக்கு சாட்டிலைட்டை அனுப்பி இருந்தாலும் இந்தியா அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் சூரியன் இருந்தாலும் அதிலிருந்து வெளிவரும் வெப்ப கதிர்களின் காரணமாக சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது என்பது செயல் அல்ல. எந்த உலோகத்தை அனுப்பினாலும் அதை பஸ்மாக்கும் சக்தி சூரியனுக்கு உண்டு. எனவேதான் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு வெற்றிகரமாக இந்தியா விண்கலத்தை அனுப்பி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலம் சூரியனின் வெப்பம், வெளிவரும் காந்த துகள்களின் தன்மை, சூரியனைச் சுற்றியுள்ள காலநிலை ஆகியவற்றை கணிக்கும் வகையில் அனுப்பப்பட்டது. சூரியனிடமிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லக்கிராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனப்படும் எல் ஒன் என்பதை அடையும் நோக்கில் பணியை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் தனது இலக்கான 125 நாள் பயணத்தை நிறைவு செய்த விண்கலம் இன்று மாலை 4 மணியளவில் லெக்ராஞ்சியன் புள்ளியை சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக சூரியனுக்கு செங்குத்தாக நிலை நிறுத்தப்படும் விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப் பாதையில் சுற்றியபடி சூரியனைப் பற்றிய இதுவரை நாம் அறியாத தகவல்களை உலகிற்கு அனுப்பும் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related posts