சிங்கப்பூரில் பெருந்தொற்று பரவல் காரணமாக நேற்று ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை பல நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பொதுஇடங்களில் மக்கள் கூடும் அளவு தொடங்கி உணவகங்களில் மக்கள் உண்ண தடை விதிக்கப்படுவது வரை பல கட்டுப்பாடுகள் சிங்கப்பூரில் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்று வந்து தேசிய தின விழாவும் இந்த ஆண்டு கிருமி பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேசிய தினத்தை முன்னிட்டு அணைத்து வருடமும் நடைபெறும் தேசிய தின பேரணி குறித்த உரை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பரவல் காரணமாகி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் கிருமி பரவல் அதிகரித்துள்ளதால் மேலும் சில கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.