Unmanned Surface Vessel அல்லது USV என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் கடற்படையின் ஆளில்லா படகு ஒன்று கடலின் மேல் பரப்பில் உள்ள கண்ணிவெடிகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் திறன் கொண்டது என்பதை தற்போது சிங்கப்பூரை கடற்படை நிரூபித்துள்ளது.
மேலும் தயார் நிலையில் இருக்கும் இந்த வகை ஆளில்லா படகுகள் விரைவில் களத்தில் இறக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆளில்லா படகுகளை கரையில் இருந்தபடியே இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்தகைய வகையான சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆள் பலத்தை கணிசமாக குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலில் உள்ள கண்ணிவெடிகளை மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு, அகற்றத் தேவையான நேரத்தையும் அது குறைக்கும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் கடற்படையின் 2 ஆளில்லா படகுகள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தென் தீவுக்கு அருகே நிகழ்ந்த பயிற்சியின்போது, கடலடியில் இருந்த மாதிரி வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.