சிங்கப்பூர் வருவதற்கு அதிக ஊழியர்கள் முன்னுரிமை கொடுப்பது skilled testக்கு தான். அதிகாரப்பூர்வமான ஒரு நிறுவனத்தில் தாம் தகுதியான துறைகளில் அட்மிஷன் போட்டு 45 முதல் 60 நாட்கள் ட்ரைனிங் எடுத்து சிங்கப்பூருக்கு செல்லலாம். ஆனால் இது சொல்வது போல எளிது கிடையாது.
முதலில் சரியான ஒரு ஏஜென்ட்டை தேர்வு செய்வதே பெரிய திண்டாட்டம் தான். அதிலும் தட்டி தவறி நல்ல ஏஜென்ட்டை தேர்வு செய்து விட்டால் அடுத்த போராட்டம் டெஸ்ட் அடிக்க தேவையான இன்ஸ்ட்டியூட்டை தேர்வு செய்வதாகவே இருக்கும்.
இன்ஸ்ட்யூட் உங்களை பெரும்பாலும் ஏமாற்றமாட்டார்கள். சில தவறான இன்ஸ்ட்யூட்கள் அதிகப்படியான தொகையை கேட்பது, உங்களை டெஸ்ட் அடிக்கும் தேர்வுக்கு அனுப்ப காலதாமதம் ஆக்குவது என ஏகப்பட்ட குளறுபடிகளை செய்வார்கள். இதில் இருந்து தப்பிக்க எங்க தமிழ் சாகா குழு களத்தில் இறங்கி விசாரித்தது.
skilled test இன்ஸ்ட்யூட்கள் இந்த துறைகளில் எத்தனை வருடமாக இருக்கிறார்கள். எத்தனை ஊழியர்களை சிங்கப்பூருக்கு சொந்த வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள் என பல அளவுகோல்களை கொண்டு விசாரித்தோம். இதில் டாப் 3 skilled test இன்ஸ்ட்யூட்டை தற்போது தேர்வு செய்திருக்கிறோம். அவர்கள் தரம் குறித்து கேட்டறிந்த தகவல்களும், எங்கள் கள ஆய்வில் கிடைத்த தகவல்களுமே இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
- Hytech Goodwill Training & Testing Center
சென்னையை சேர்ந்த மேடவாக்கத்தில் அமைந்துள்ளது hytech நிறுவனம். 1997ல் தொடங்கிய இந்த நிறுவனம் முதல் டெஸ்ட்டை 1999ல் தான் நடத்தி இருக்கிறது. கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம், சிங்கப்பூர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றில் இந்த நிறுவனத்தில் முறையாக பதிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
- RK Singapore (BCA) Skilled Training & Testing Centre
இந்த நிறுவனம் 1998ல் இருந்து செயல்பட்டு வருகிறது. 15238 ஊழியர்கள் இவர்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பயிற்சியில் ஈடுபட இட வசதிகளையும் இந்த இன்ஸ்ட்யூட் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இருக்கும் நீலாங்கரை பகுதியில் தான் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
- Taf
சென்னையில் இருக்கும் skilled test அடிக்கும் முக்கிய நிறுவனங்களில் இதற்கும் இடம் உண்டு. ட்ரைனிங் மட்டுமல்லாமல் தங்குமிடமும் சிறப்பாக இருப்பதாக அங்கிருக்கும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேல் சொன்ன மூன்று நிறுவனங்களிலுமே உங்களின் பயிற்சி சிறப்பானதாக இருக்கும் படி பார்த்து கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த இன்ஸ்ட்யூட்டின் பெயரை கூகுளில் தேடினால் அட்ரஸுடன் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் விரைவில் சிங்கப்பூர் அரசாங்கம் டெஸ்ட் அடிக்க புதிய நடைமுறை குறித்து அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்ஸ்ட்யூட்டினை தேர்வு செய்தால் ஜனவரி வரை பொறுத்திருந்து மற்ற முடிவுகளை நீங்கள் எடுப்பதே சிறந்ததாக இருக்கும்.
இந்த தகவல் அனைத்துமே எங்களது கள ஆய்வில் கண்டறிந்தது மட்டுமே. இது எந்தவித விளம்பர நோக்கத்துக்காக இதை செய்யவில்லை. முழுக்க முழுக்க தமிழ் சாகா வாசகர்களுக்கு பிரத்யேகமாக திரட்டப்பட்ட தகவல்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் நம்பிக்கைக்காக நீங்களும் விசாரித்து கொள்வது நல்லது.