லண்டனில் உள்ள Birmingham என்ற இடத்தில் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று வியாழன் அன்று (ஜூலை 28) அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டுள்ளது. இதில் நமது சிங்கப்பூர் சார்பில் ஒன்பது விளையாட்டுகளில் 67 தடகள வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
கடந்த 2018ல் கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், நமது சிங்கப்பூர் அணி ஐந்து தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த முறை இன்னும் பல பதக்கங்களை சிங்கப்பூர் அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை மொத்தம் 67 வீரர் வீராங்கனைகள் சிங்கப்பூர் சார்பாக பங்கேற்க உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரரான சாந்தி பெரேராவும் தடகள பிரிவில் பங்கேற்க உள்ளார்.
யார் இந்த சாந்தி பெரேரா?
இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தி கடந்த 1996ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர், 100 மீட்டர், 200 மீட்டர், 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் இவர் ஒரு expert என்றே கூறலாம்.
இந்த 25 வயதில் அவர் நமது சிங்கப்பூர் மண்ணுக்கு பெற்றுத்தந்த பெருமைகள் பல, பெரேரா 100 மீட்டர்கள் (11.58 வினாடிகள்) மற்றும் 200 மீட்டர்கள் (23.52) போட்டிகளில் தேசிய சாதனைகளைப் படைத்துள்ளார். மேலும் முறையே 100 மீ மற்றும் 200 மீ என்ற போட்டி இலக்கை முறையே 12 மற்றும் 24 நொடிகளில் கடந்த முதல் சிங்கப்பூர் பெண்மணியும் இவரே.
அதே போல 100 மீட்டர்கள் (11.80 வினாடிகள்) மற்றும் 200 மீட்டர்கள் (23.99 வினாடிகள்) யு-23 சாதனைகளையும் அவர் பெற்றுள்ளார். மேலும் 4 x 100 மீட்டர்கள் (46.64 வினாடிகள்) மற்றும் 4 x 400 மீட்டர்கள் (4 x 400 வினாடிகள்) சாதனைகளை படைத்த அணிகளில் உறுப்பினராகவும் இருந்துள்ளார் சாந்தி.
அடுக்கடுக்காக பல சாதனைகளை புரிந்து வரும் சாந்தி லண்டனில் நடக்கும் இந்த Common Wealth போட்டிகளிலும் நிச்சயம் நமது சிங்கப்பூரை பெருமையடைய செய்வர் என்பதில் சந்தேகமில்லை.