தமிழகத்தில் உயர் தொழில்நுட்ப பகுதி மின்கடத்திப் பூங்கா (Semiconductor Park) ஒன்றை அமைத்திட தமிழக அரசுடன் நமது சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட IGSS Ventures என்ற நிறுவனம் புரிந்துணர்வுக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தமிழக வரலாற்றில் இதுவரை தமிழக அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடுகளில் இந்த 25,600 கோடி ஒப்பந்தமும் ஒன்று என்று கூறப்படுகிறது. நமது சிங்கப்பூரை தலைமையுமாகக் கொண்ட இந்த நிறுவனம் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சென்னை புறநகர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இந்த செமி கண்டக்டர் ஹைடெக் பார்க் மற்றும் மேனுபேக்ச்சரிங் யூனிட் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றத்தில் இருந்து கையெழுத்தாகும் மிகப்பெரிய முதலீடு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் IGSS Ventures நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாகியுமான திரு. ராஜ்குமார் அவர்கள் நமது சிங்கப்பூரின் தேசிய உற்பத்தித் திறன் மன்றத்தினுடைய உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.