TamilSaaga

சிங்கப்பூருக்கு அதிக அளவிலான “வெளிநாட்டு ஊழியர்கள் தேவை..” மனிதவள நெருக்கடியைச் சமாளிக்க உதவுங்கள் – அரசுக்கு கோரிக்கை வைக்கும் வணிகங்கள்!

சிங்கப்பூர் வணிகக் கூட்டமைப்பு (SBF) வெளியிட்ட தகவலில் சிங்கை அரசும் அதனுடன் தொடர்புடைய பங்குதாரர்களும் சேவைத் துறையில் (Service Sector) உள்ள வகைப்பாடுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு மனிதவளத்தை நம்பியிருக்கும் வணிகங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களில் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று கூறியுள்ளது. சிங்கப்பூரில் தற்போதுள்ள மனிதவள நெருக்கடியை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து நேற்று வியாழன் (மே 12) அன்று வெளியிடப்பட்ட SBF அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBFன் இந்த அறிக்கைக்கு பதிலளித்த சில்லறை விற்பனையாளர்கள், Service Sector துறைக்குள் வகைப்படுத்தல்களை மதிப்பாய்வு செய்வதற்கான திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர். ஏனென்றால், Service Sector துறையில் உணவு மற்றும் பானங்கள் (F&B), கழிவு மேலாண்மை மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகள் உள்ளன.

ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகள் மற்றும் வெளிநாட்டு மனிதவளத்தை நம்பியிருக்கும் வணிகங்கள் என்று அவர்கள் கூறினார். மேலும் மனிதவள நெருக்கடியை எதிர்கொள்ளும் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இரண்டாம் நிலை கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அதிக தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், அவர்களை அந்த துறையில் தக்கவைத்துக் கொள்வதற்கும் உதவுவது மற்றொரு வழி என்ற ஆலோசனையையும் வழங்கினார்.

இந்தியாவில் பரோட்டா மாஸ்டர்களை விட குறைவாக சம்பளம் வாங்கும் இன்ஜினியர்கள் – சிங்கப்பூரில் அதன் ரேஞ்சே வேற

சில்லறை விற்பனையாளர் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​ஸ்டோரின் இயக்குனர் திருமதி. கிரேஸ் டான் பேசும்போது, சன்டெக் சிட்டி Down Town மற்றும் டாம்பைன்ஸில் உள்ள செஞ்சுரி சதுக்கத்தில் அமைந்துள்ள தனது கடைகளில் சேவைப் பணிகளுக்கான இரண்டு காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டிலிருந்து போராடி வருவதாக கூறினார்.

அதேபோல ஒரு தனியார் நிறுவனத்தில் தலைவரான திரு. சீ கூறுகையில், தொற்றுநோய்களின் போது, ​​​​வெளிநாட்டினர் அவர்களின் நலன் கருதி சொந்த நாடுகளுக்கு திரும்பியதாலும், சிலர் மற்ற நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றதாலும் அவர் தனது மனிதவளத்தில் 40 சதவீதத்தை இழந்துள்ளார்.

சாங்கி விமான நிலையம் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகள் கவனத்திற்கு – டாக்ஸி தட்டுப்பாட்டை குறைக்க அதிகரிக்கப்படும் கட்டணம்

இதன் விளைவாக, தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் 35 விற்பனை நிலையங்களை கொண்டிருந்த அவர் தற்போது வெறும் 22 நிலையங்கள் மட்டுமே வைத்துரைப்பதாக கூறினார். ஆகவே சிங்கப்பூரில் தற்போது நிலவும் மனிதவள நெருக்கடியை குறைக்க அதிக அளவிலான வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு தேவை என்பதே பல வணிகர்களின் கருத்தாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts