உலக அளவில் இரட்டை குழந்தைகள் பிறப்பதை நாம் சர்வசாதாரணமாக பார்த்திருப்போம், ஆனால் என்னதான் அவர்கள் இரட்டையர்கள் என்று அழைக்கப்பட்டாலும் ஏதோ ஒரு சிறிய அளவிலான வித்யாசம் அவர்களிடையே நிச்சயம் இருக்கும்.
ஆனால் அப்படி எந்தவிதமான சின்ன வித்யாசம் கூட இல்லாமல் பிறகும் குழந்தைகளைத் தான் “Worlds Most Identical Twins” என்று அழைக்கிறார்கள். அந்த வகையில் பிறந்த குழந்தைகள் தான் Anna மற்றும் Lucy DeCinque என்ற இரு குமரிகளாலாக வளர்ந்து நிற்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் உலக அளவில் இந்த இரட்டையர்கள் அளவிற்கு யாரும் ஒரேமாதிரியாக இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சகோதரிகளும் அதற்கு ஏற்றார் போல தாங்க செய்யும் அனைத்து விஷயங்களையும் ஒன்றாகவே செய்கிறார்களாம், அது உணவு உண்பது, குளிப்பது என்று எல்லாம் தான் என்கிறார்கள்.
சரி எல்லாம் ஒன்றுபோல செய்கின்றார்கள், அப்போ கல்யாணம்? அட அதுவும் ஒரே நபரைத் தான் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள் இந்த சகோதிரிகள். தங்களுடைய 9 ஆண்டுகால காதலரான Ben என்பவருடன் 9 வருடங்களாலாக ஒன்றாக வாழ்த்து வருகின்றனர்.
இறுதி நாட்களை ஒன்றாக கழிப்பது, குழந்தைகளை ஒன்றாக வளர்ப்பது தொடங்கி ஒரே நேரத்தில் இறக்கவும் விரும்புகிறார்களாம் இந்த சகோதிரிகள். எல்லாம் சரி ஆனால் ஒரே நேரத்தில் குழந்தை பிறப்பது என்பது சாத்தியமா?, ஆனால் அதற்கும் ஒரு வழி கண்டுள்ளனர் இந்த சகோதிரிகள்.6
இயற்கையான முறையில் இது சாத்தியமில்லை என்பதால், தங்கள் கருமுட்டைகளை சேகரித்து அதை ஒரே நேரத்தில் உறையவைத்து பின் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த பலே ஐடியாவிற்கு Ben தற்போது சம்மந்தம் தெரிவித்துள்ளதால் சகோதிரிகள் படு குஷியில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்த இரட்டை சகோதிரிகள் சற்று வித்யாசமாக யோசிக்கின்றனர் என்றபோது அவர்களுக்கு இடையில் இருக்கும் அந்த பந்தம் உண்மையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.