TamilSaaga

சிங்கப்பூர் பயா லெபார் பகுதி.. கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்ட இளைஞர்கள்.. ஏன்? போலீசார் தீவிர விசாரணை – வெளியான வீடியோ

கடந்த மே 3ம் தேதி, செவ்வாய்கிழமை மாலை பயா லெபார் சதுக்கத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டதை அடுத்து அந்த நிகழ்வு குறித்து சிங்கப்பூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சம்பவத்தன்று இரவு 7:30 மணியளவில் 60, பயா லெபார் சாலையில் நடந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நிகழ்வு குறித்து வெளியான வீடியோவில் பல இளைஞர்கள் கூச்சலிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதை காண முடிந்தது.

ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காணொளி

மேலும் அந்த வீடியோவில் தரையில் மஞ்சள் சட்டை அணிந்திருந்த நிலையில் கிடந்த நபரை ஐந்து பேர் ஒன்றுகூடி அடிப்பதை வீடியோவில் காணமுடிந்தது. அதேபோல மற்றொரு குழுவை சேர்ந்த ஆட்கள் யாரையோ துரத்துவது போலவும் தோன்றியது.

தென்கிழக்கு ஆசியாவில் இதுவே முதல்முறை.. ஹாலிவுட் தரத்தில் சிங்கப்பூரில் ஒரு Augmented Reality Studio – சிங்கையை பெருமைப்பட வைத்த OMG நிறுவனம்

அங்கு குழுமியிருந்த பலர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக்கொண்டு நின்றதையும் நம்மால் பார்க்கமுடிகிறது. முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் இதே இடத்தில் 4 ஆண்கள் குழுவாக மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக இதுபோல பல இளைஞர்கள் குழுவாக சண்டையிடுவது சர்வசாதாரணமாக மாறிவிட்டது.

உண்மையில் பொதுமக்களுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் அனைவரையும் சிங்கை போலீஸ் இரும்பு கரம்கொண்டு ஒடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts