SINGAPORE: Ang Mo Kio அவென்யூ 3 இல் உள்ள பிளாக் 562 முதல் 565 வரையிலான குடியிருப்புகள் Selective En bloc Redevelopment Scheme (SERS) எனும் மறுசீரமைப்பு திட்டத்துக்கு உட்படுத்தப்படும் என்று உட்படுத்தப்படும் என்று சிங்கப்பூரின் The Housing & Development Board (HDB) நேற்று (ஏப்ரல்.7) அறிவித்தது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2018ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு, சிங்கப்பூரில் இப்போது தான் ஒரு குடியிருப்பு SERS எனப்படும் மறுசீரமைப்பு திட்டத்துக்கு உட்படுத்தப்படுகிறது.
1995 இல் அறிமுகப்படுத்தப்பட்ட SERS என்பது, பழைய அபார்ட்மெண்ட்டுகளை புதுப்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
அந்த வகையில், Ang Mo Kio அவென்யூ 3 இல் உள்ள பிளாக் 562 முதல் 565 வரையிலான குடியிருப்புகள் இப்போது புதுப்பிக்கப்பட உள்ளன. இதனால் அங்கு வசிக்கும் 600 குடும்பங்கள் வெளியேறியாக வேண்டும்.
1979 ஆம் ஆண்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அங்கு வசிக்கும் சில குடியிருப்பாளர்களுக்கு, அரசின் இந்த அறிவிப்பு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
அவர்களில் பலர் தங்களின் ஆதங்கத்தையும், வேதனையையும் வெளியிட்டுள்ளனர். அங்கு வசிக்கும் 52 வயதான திருமதி ஐரீன் என்ஜி கூறுகையில், “நான் என்பது ஒன்பது வயதிலிருந்தே இந்த குடியிருப்பில் வசித்து வருகிறேன்.
கிட்டத்தட்ட 43 வருடங்களாக நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். என் சகோதரி எனக்கு பக்கத்து வீட்டில் வசிக்கிறார். இப்படி அனைவரும் ஒன்றாக குடும்பமாக வசித்து வருகிறோம்.
இப்போது திடீரென வெளியேறச் சொல்வதால், மீண்டும் என் சொந்தங்களுடன் என்னால் இணைந்து வசிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்னால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துளளார்.
அதேசமயம், அதே குடியிருப்பில் வசித்து வரும் 42 வயதான கோவிந்தசோமதிக்கு அரசின் உத்தரவை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், “இந்த கட்டடம் நீண்ட காலமாக உள்ளது. எனவே அரசாங்கம் இதைச் செய்வது நல்லது தான்” என்கிறார். எனினும், இங்கு வசிக்கும் பல குடும்பங்கள், இந்த குடியிருப்பை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றே தெரிகிறது.
இங்கிருந்து வெளியேற்றப்படும் அனைத்து குடும்பங்களுக்கும், 1 கிமீ தொலைவில் உள்ள ஆங் மோ கியோ டிரைவில் புதிய மாற்று குடியிருப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.