TamilSaaga

“பெண்கள்ன்னா சும்மா இல்ல.. வாலை சுருட்டி வைக்கலனா பெண்டு கழட்டிடுவோம்” – சிங்கப்பூர் கணவர்களுக்கு அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை

SINGAPORE: நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை குறித்த விவாதத்தின் போது பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் பெண்கள் முன்னேற்றம் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் வன்முறைக்கு எதிராக பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய அமைச்சர் சண்முகம், “பாலின சமத்துவம், மரியாதை ஆகியவை இங்கு மிக மிக முக்கியம். பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “வெள்ளை அறிக்கை மற்றும் அதைச் சுற்றி நடந்த விவாதங்கள் குறிப்பிடத்தக்க உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் பாலின சமத்துவத்திற்கான பாதையில் எங்களை மேலும் நகர்த்தியது.

மேலும் படிக்க – ஷங்கர் பட பிரம்மாண்டத்தை மிஞ்சிய சிங்கப்பூர் வாலிபரின் “Love Proposal” – இப்படியொரு காதலை எதிர்பார்க்காத காதலி – வியந்து நின்ற Marina Bay பகுதி மக்கள்

மனைவிகள் பேசுவதற்கு முன் தங்கள் கணவரின் அனுமதியைப் பெறவும், அவர்கள் சாப்பிட்டு பிரார்த்தனை செய்த பிறகு அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும்போது அவர்களிடம் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

“சிங்கப்பூரில், நீங்கள் உங்கள் மனைவியை அடித்தால் அல்லது அவர்களை துன்புறுத்தினால் போலீஸ் உங்களைத் தேடி வரும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம்.

வன்முறை நிகழவில்லை என்றாலும், மிரட்டல்களை எதிர்நோக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வழிகாட்டப்படும். சிறந்து நாட்கள் தம்பதிகள் பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் கணவன், மனைவி இருவரும் சமரசம் செய்துகொள்ளவும் வாய்ப்புண்டு” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts