TamilSaaga

துணிகளுக்கு மறைவில் நின்று “சுய இன்பம்” செய்த நபர்.. அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்த மக்கள் – பின்வாசல் வழியாக தப்பியோட்டம்

மலேசியாவில் ஒரு ‘மாமனிதர்’ பலான செயலில் ஈடுபட்டு, தலைத்தெறிக்க ஓடியிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மலேசியாவின் ஸ்ரீ சென்டோசாவில் உள்ள கடை ஒன்றுக்கு, கடந்த மார்ச் 14ம் தேதி, 62 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்றிருக்கிறார். உடைகள் வாங்குவது போல் வந்த நபர், அந்த அந்த கடையில் துணிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த ரேக்குகளின் மறைவில் போய் நின்று கொண்டு, சுய இன்பத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் படிக்க – சென்னை, மதுரையில் இருந்து மார்ச். 27 முதல் சிங்கப்பூருக்கு VTL விமானங்கள் – Air India Express-ன் “மிக முக்கிய” அறிவிப்பு

நீண்ட நேரமாக மறைவில் நின்று சுயஇன்பத்தில் ஈடுபட்டிருந்த அந்த நபரை அவருக்கே தெரியாமல் ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். இதையறிந்த அந்த பலான நபர், கடையின் பின்புறம் வழியாக வெளியேறி, தனது மோட்டார் பைக்கில் ஏறி தெறித்து ஓடிவிட்டார்.

இதையடுத்து, கோலாலம்பூர் போலீசார், அந்த வீடியோவை வைத்து அந்த நபரை கண்டுபிடித்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நபர் Puchong பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இந்த குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு RM3000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதாவது, சிங்கப்பூர் டாலர் மதிப்பில் S$973.

அவர் அபராதம் செலுத்தவில்லை எனில் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts