ஒருவருக்கு அதிர்ஷ்டம் மட்டும் இருந்துவிட்டால், அது எதை பிச்சிகிட்டு வேண்டுமானாலும் கொடுத்துவிடும். அப்படி ஒருவருக்கு விழுந்த லாட்டரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமீரகத்தின் பிரபல MEGA7 லாட்டரி குலுக்கலில் இந்தியர் ஒருவர் மெகா பரிசை வென்றுள்ளார்.
Emirates Draw MEGA7 இன் சமீபத்திய குலுக்கலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 517 வெற்றியாளர்கள் மொத்தமாக Dh699,209 தொகையை வென்றுள்ளனர். அதில் குறிப்பாக, ஏழு Raffle வெற்றியாளர்களில் ராபர்ட் பாரே மற்றும் பிலிப் நேரி வாஸ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் இருவரும் தலா 77,777 திர்ஹம்களை வென்று வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.
இதில், சுவிஸ் நாட்டவரான ராபர்ட் பாரே, தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார். அவர் சில மாதங்களாக எமிரேட்ஸ் டிரா MEGA7 விளையாடி வருகிறார். வாரத்திற்கு இரண்டு முறை லாட்டரி வாங்கி வந்த ராபர்ட், இம்முறை ஜாக்பாட் பரிசை வென்றிருக்கிறார்.
வெற்றியாளரில் மற்றொருவரான பிலிப் நேரி வாஸ் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். 62 வயதான பிலிப் நியாபக மறதி பிரச்சனை உள்ளவர். அவர் தனது டிக்கெட்டை வாங்குவதற்கு மொபைலில் Reminder வைத்து தான் வாங்கினார். அன்று மட்டும் அதை மறந்திருந்தால், இந்த பம்பர் பரிசு அவருக்கு விழுந்திருக்காது. பிலிப் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார். திங்கட்கிழமை தனது அலுவலக பணியில் மூழ்கியிருந்த பிலிப்புக்கு எமிரேட்ஸ் டிரா டீமில் இருந்து எதிர்பாராத அழைப்பு வரும் வரை குலுக்கல் முடிவுகளைப் பற்றி எதுவும் தெரியாது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மூன்று சிறிய வெற்றிகளுக்குப் பிறகு, இறுதியாக ஜாக்பாட் பரிசை வெல்வதற்கு எனது நேரம் வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பரிசுத் தொகையை பொறுப்புடன் பயன்படுத்த விரும்புகிறேன். இந்த தொகையில் ஒரு பகுதியை முதியோர் இல்லம் மற்றும் குழந்தைகள் அனாதை இல்லத்திற்கும் நான் பங்களிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
நல்ல நேரம் அமைந்துவிட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது.