அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வருகின்றனர். அமெரிக்காவிலிருந்து சி-17 ராணுவ விமானம் ஒன்று 205 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள்.
இந்த விமானத்தில் 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சுமார் 7,25,000 இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் நிர்வாகம், சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்த நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்பப் பெறுவதில் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், நாடு கடத்தப்பட வேண்டிய நபர்களை இந்தியா சரிபார்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாளிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தின் போது தான் கூறியவாறு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அமெரிக்காவின் நலன்கள் முக்கியம் எனக் கூறி, டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு நாடுகளுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தி வருகிறார். அதேசமயம் சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக முன்னெடுத்து வருகிறார்.
இந்த தீர்மானங்கள் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் மாற்றங்களை உருவாக்கியுள்ளதோடு, சர்வதேச அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தும் வகையில், டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பதை தொடங்கி பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்துள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்” என டிரம்ப் உறுதி மொழி அளித்துள்ளார். இதன் காரணமாக, சர்வதேச வர்த்தகத்தில் போட்டி நிலையை பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களுக்கான வரிகளை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், டிரம்பின் இந்த அணுகுமுறை, வர்த்தக போர் மூளும் அபாயத்தையும் சர்வதேச பொருளாதார துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியதையும் முன்னிறுத்துகிறது.
சீனாவுடன் அமெரிக்காவின் வர்த்தக உறவுகள் மிகுந்த பதற்றத்தை சந்தித்துள்ள நிலையில், உலகளாவிய பொருளாதாரத்தின் மீது இதன் தாக்கம் தொடரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையால், சட்டமுறை ஒழுங்குகளை கடைப்பிடிக்காமல் இருக்கும் வெளிநாட்டு குடியாளர்கள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், 90,415 இந்தியர்கள் அனுமதியின்றி அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மெக்சிகோ எல்லையை ஒட்டி உள்ள அமெரிக்க மாநிலங்களில் அவசரநிலையை அறிவித்துள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த பகுதிகளில், சட்டவிரோதமாக குடியேறிய மக்களை கண்டறிந்து தணிக்கை செய்யும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனுடன், கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை கடுமையாக மாற்றப்பட்டுள்ளது. இது, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல மோசடிகள் நடக்கின்றன. இதில், முறையான விசா இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய முயல்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்க அரசு சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அவ்வப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது…. மீட்புக் குழுக்கள் பணியில் தீவிரம்!!