திமுக எம்.எல்.ஏ.,வும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மனுதாரரை நீதிபதி எச்சரித்தார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை தேர்த்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இவரின் வெற்றிக்கு பிறகு அந்த தொகுதியே இப்போது தலைக்கீழாக மாறியுள்ளது என்பது தான் நிதர்சனம்.
திமுக சார்ப்பில் இந்த வெற்றி பெரிதளவில் கொண்டாட்டப்பட்டது. காரணம் உதய்-க்கு சீட் வழங்கப்பட்ட முதன்முறையே அவர் வெற்றி கண்டு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்தார்,. கட்சிக்கும் சரி அவரின் அப்பாவான முதல்வர் ஸ்டாலினுக்கும் சரி.
இது ஒருபுறம் இருக்க, இந்த தொகுதியில் உதயநிதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடரப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் உதய் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் உதயநிதி வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதில், உதயநிதி தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், ஆகவே அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போது வைப்புத்தொகையை செலுத்தவில்லை என்றால் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, வெற்றி பெற்றது செல்லும் என முடிவெடுக்கு நேரிடும் என மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்து வழக்கை வரும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்தார்.