TamilSaaga

சென்னை விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்: இனி குறைந்த விலையில் கிடைக்கும்!! பயணிகள் மகிழ்ச்சி….

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்திய அரசின் பல்வேறு முயற்சிகள் மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் போட்டி காரணமாக விமான பயணக் கட்டணம் குறைந்துள்ளது. இதை அடுத்து இந்தியாவில் பொதுவாக விமான நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். இதனால் பயணிகள் தண்ணீர் வாங்கக்கூட தயங்குவார்கள். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ‘உதான் யாத்ரி கஃபே’ திட்டத்தின் கீழ் குறைந்த விலை உணவகத்தை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். இதன் மூலம், விமான நிலையத்தில் டீ ரூ.10, காபி ரூ.20, தண்ணீர் பாட்டில் ரூ.10, சமோசா ரூ.20 என குறைந்த விலையில் உணவு கிடைக்கும்.

 

பொதுவாக விமான நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், இந்தத் திட்டம் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த உணவகத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்துகின்றனர்.

நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் விமான சேவைகளை பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக ‘உதான் யாத்ரி கஃபே’ திட்டம் தொடங்கப்பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “உதான்” திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 619 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 1.57 கோடி மக்கள் இந்த வழித்தடங்களில் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவது அரசின் கடமை என்றும், இன்னும் பல விமான நிலையங்களில் இதுபோன்ற உணவகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கொல்கத்தா விமான நிலையத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது சென்னை விமான நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணிகளின் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், விரைவில் நாடு முழுவதும் உள்ள பிற விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? சுகாதாரத் துறையின் அதிர்ச்சி அறிக்கை!!!!

இந்தியாவின் நான்காவது பெரிய விமான நிலையமான சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

விமான நிலையத்தின் விரிவாக்கம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தை ஆண்டுதோறும் 2.2 கோடி பயணிகள் பயன்படுத்துகின்றனர். இது 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன், பயணிகள் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், கோயம்புத்தூர் விமான நிலையத்தையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன், சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts