TamilSaaga

Trolleybus ‘டூ’ SBS Transit.. மற்ற நாடுகள் 8 அடி பாய்ஞ்சா.. 100 அடி பாய்ந்த சிங்கப்பூர் – டப்பா வண்டிகளை மிஞ்சிய சிங்கையின் “அப்பாட்டக்கர்” பேருந்துகள் – வியக்க வைக்கும் 100 வருட வரலாறு!

சிங்கப்பூரில் அரசிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதை தற்போது சாதித்துக் காட்டியிருக்கிறது “Go-Ahead Singapore” பேருந்து நிறுவனம்.

ஆம்! சிங்கப்பூரில் முதன் முதலாக டெண்டர் எடுக்கப்பட்ட பேருந்து நிறுவனத்தின் ஒப்பந்தம், ஏழு ஆண்டுகள் வரையிலான ஒப்பந்த கால அளவைத் தாண்டி இப்போது முதன் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள பாசிர் ரிஸ் நகரில் அமைந்துள்ள Loyang பகுதியில் பேருந்து சேவையில் இந்த Go-Ahead Singapore நிறுவனம் இயங்கி வந்தது. அவர்களது பணிகள் சிறப்பாக இருந்ததால், தற்போது மீண்டும் 3 ஆண்டுகளுக்கு அவர்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

SBS Transit, SMRT Buses, Tower Transit Singapore பேருந்துகள் சிங்கப்பூரில் இயங்கி வந்த நிலையில், புதிய நிறுவனமான Go-Ahead, கடந்த 2016ம் ஆண்டு, செப்டம்பர் 4 முதல் சிங்கையில் தனது பேருந்து சேவைகளை தொடங்கியது.

சரி… சிங்கப்பூரில் பேருந்துகள் எப்போது தொடங்கப்பட்டன? டிராம் வண்டிகள் எப்போது காலாவதியாகின? பேருந்து இயக்கத்தில் சிங்கப்பூரின் வளர்ச்சி எவ்வாறாக இருந்தது என்று இங்கு பார்க்கலாம்.

சிங்கப்பூரில் டிராம் வண்டிகள் தான் ஆரம்ப காலக்கட்டத்தில் இயங்கி வந்தது. ஆனால், அதன் எலக்ட்ரிக் கட்டமைப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததால், டிராம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு “trolleybus” எனப்படும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. 1926ம் ஆண்டு சிங்கப்பூர் டிராக்ஷன் கம்பெனி (STC) மூலம் இந்த பேருந்துகள் சிங்கப்பூரில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டன.

துல்லியமாக சொல்ல வேண்டுமெனில், முதல் டிராலிபஸ்கள் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜூ சியாட் சாலை மற்றும் தஞ்சோங் பாகர் இடையே செயல்படத் தொடங்கியது. அதே நேரத்தில் 1927 ஆம் ஆண்டில் டிராம்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. அதே ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 66 டிராலிபஸ்கள் சிங்கப்பூரின் ஆறு வழித்தடங்களில் இயங்கின. அப்போது அதன் மைலேஜ் என்ன தெரியுமா? 15.

பின்னர் 1929ம் ஆண்டு, STC மோட்டார் பேருந்துகளை வடிவமைத்தது. இதில், முதல் கட்டமாக ஏழு மோட்டார் பேருந்துகள் கெயிலாங் மற்றும் ஃபின்லேசன் கிரீன் இடையே இயக்கப்பட்டன.

மேலும் படிக்க – சிங்கப்பூர் இவ்வளவு பாதுகாப்பான நாடா! சிங்கை மக்களை நம்பி வெளிநாட்டு இளைஞர் எடுத்த ரிஸ்க் – வைரலாகும் வீடியோ!

மக்களிடையே இந்த மோட்டார் பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், STC சந்தித்த ஒரு சவால் உங்களை சற்றே ஆச்சர்யப்படுத்தலாம். ஆம்! ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான “கொசு-பேருந்துகள்” எனப்படும் “mosquito-buses”-களின் ஆதிக்கத்தால் STC கடும் சவாலை சந்தித்தது.

அதென்னப்பா கொசு பேருந்து?

அந்த காலக்கட்டத்தில் இயங்கி வந்த ஃபோர்டு T car chassis கார்கள், 7 பேர் உட்காரக்கூடிய மினி பேருந்துகளாக மாற்றியமைப்பட்டு அவைகளுக்கு ‘கொசு’ பேருந்து என்று பெயர் வைக்கப்பட்டது. எவ்வளவு டிராஃபிக் இருந்தாலும், வாகனங்களுக்கு இடையே புகுந்து, வளைந்து கொசுவைப் போல் வேகமாக செல்லும் தன்மை கொண்டிருந்தது. வேகமாக செல்வது மக்களின் நேரத்தை மிச்சம் செய்தாலும், அதன் ஓவர் ஸ்பீடு மாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இத்தகைய “கொசு-பஸ்களை” பொறுப்பற்ற முறையில் இயக்கப்பட்டு வந்ததாலும், ஒரு நிலையான பஸ் ஸ்டாப்பில் நிற்காமல், நினைத்த இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்துவது, அதிக வேகத்தில் இயக்கப்பட்டது போன்ற காரணங்களால், சிங்கப்பூர் கடுமையாக கட்டுப்பாடுகளை அப்போது தான் கொண்டு வந்தது. அதுமட்டுமின்றி, 1930-க்கு பிறகு, அதவாது 1935 வாக்கில், “கொசு-பேருந்துகள்” பெரிய பேருந்து சேவைகளாக மாற்றப்பட்டன. இந்த பேருந்துகள் STC நகர பகுதிகளில் இயங்காமல், சிங்கப்பூரின் கிராம பகுதிகளை இணைக்கும் பாலமாக செயல்பட்டன.

பிறகு ஏற்பட்ட இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் ஜப்பானி ஆக்கிரமிப்பு நிகழ்ந்த போது, அனைத்து பேருந்து இயக்கங்களும் சியோனன்-சி டென் எனும் அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன, இதில் ஒரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? உலகப் போரின் போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, சில பேருந்துகள் கரியால் இயங்கி வந்தன.

பிறகு, டிராலிபஸ்கள் 1962 இல் படிப்படியாக நிறுத்தப்பட்டு, புதிய Isuzu வகை மோட்டார் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.

மேலும் படிக்க – சிங்கப்பூர் “ரோத்தா”… உலகிலேயே கொடூரமான தண்டனை – சிங்கப்பூரில் “கற்பழிப்பு” என்ற கான்செப்ட்டையே ஒழித்து பெண்களை நள்ளிரவிலும் நடக்க வைத்த மெகா “ஆயுதம்”

ஏப்ரல் 1971 இல், 10 சீன பேருந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து சிங்கப்பூரின் மூன்று முக்கிய பகுதிகளுக்கு மூன்று பேருந்து நிறுவனங்களை உருவாக்கின, அதாவது மேற்கில் அமல்கமட் பேருந்து நிறுவனம், கிழக்கில் அசோசியேட்டட் பேருந்து சேவைகள் மற்றும் வடக்கில் யுனைடெட் பேருந்து நிறுவனம் என்று 3 நிறுவனங்களை உருவாக்கின. இதனால், STC-க்கு இன்னும் போட்டி அதிகரித்தது. இதில், மத்திய சிங்கப்பூரில் STC தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது, எனினும், நிதிச் சிக்கல்கள் மற்றும் சீன நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல், STC 1971 இல் பேருந்து இயக்கத்தை நிறுத்தியது. இறுதியில் 1973 இல், சிங்கப்பூர் அரசாங்கம் மூன்று பகுதிகளுக்கான பேருந்து இயக்கங்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் பேருந்து சேவைகள் (SBS) என்ற ஒற்றை நிறுவனத்தை உருவாக்குவதற்கான அடித்தளமிட்டது.

தொடர்ந்து சீராக இயங்கிவந்த SBS அமைப்பு, 1977 ஆம் ஆண்டில், அதன் முதல் டபுள் டெக்கர் பேருந்துகளான லேலண்ட் அட்லாண்டியன் AN68 பேருந்தை, டம்பைன்ஸ் வே மற்றும் ஷென்டன் வே இடையே அறிமுகம் செய்தது. இதுதான் சிங்கப்பூரின் முதல் டபுள் டெக்கர் பேருந்தாகும்.

பிறகு 1980களில், SBS ஆனது Volvo B57, Mercedes-Benz OF1417 மற்றும் Leyland Atlantean AN68 போன்ற புதிய பேருந்துகள் அறிமுகம் செய்து, உலக நாடுகளை வியக்க வைத்தது.

இப்படி தொடங்கிய சிங்கப்பூரின் பேருந்து சேவைகள் இன்று, நவீனத்தின் உச்சமாக வளர்ந்து நிற்கிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts