TamilSaaga

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்ட Y Mengyu – சிங்கப்பூர் மக்கள் வருத்தம்

சிங்கப்பூர் சார்பாக ஒலிம்பிக்கில் போட்டியிட்ட Y Mengyu வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

வெண்கல பதக்கத்தை வெல்ல விளையாடிய போட்டியில் சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்த விளையாடிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை Y Mengyu ஜப்பான் நாட்டை சேர்ந்த மீமா இடாவுக்கு எதிராக விளையாடினார்.

Y Mengyu முதல் செட்டை வென்றார் (11-6). இருப்பினும், அவர் இரண்டாவது (8-11), மூன்றாவது (7-11), நான்காவது (7-11) மற்றும் ஐந்தாவது (6-11) செட்டை இழந்தார்.

மீமா இடே உலக அளவிலான தரவரிசையில் 3வது இடத்தில் இருப்பவர். அரையிறுதிப் போட்டியில் சீனாவின் சன் யங்ஷிவால் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.

இதற்கு முன்பாக நேற்று அதிகாலையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் Y Mengyu சீனாவின் சென் மெங்கால் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். நான்கு செட்களை இழந்த நிலையில் நான்காவது செட்டில் Y Mengyu விற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு அதனாக் அந்த ஆட்டம் நிறுத்தப்பட்டது.

Related posts