சிங்கப்பூர் மெரினா பே குரூஸ் மையத்திற்கு இன்று (ஜூலை 14) காலை 6.30 மணியளவில் Dream Cruise நிறுவனத்தின் world dream என்ற சொகுசு கப்பல் வந்தது. நான்கு பகல் மூன்று இரவு என்ற கணக்கில் தனது பயணத்தை மேற்கொண்டுள்ள அந்த கப்பல் இன்று காலை சிங்கப்பூர் வந்த நிலையில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது.
இந்நிலையில் அந்த கப்பலில் கொரோனா நோயாளியுடன் மிகவும் நெருக்கத்தில் இருந்த பயணி ஒருவர் அந்த கப்பலில் பயணித்த நிலையில் அதிரடியாக அந்த சொகுசு கப்பல் மீண்டும் சிங்கப்பூர் வர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அந்த பயணி கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டார் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் இயக்குனர் அன்னி சாங் தெரிவித்தார்.
மேலும் அன்னி வெளியிட்ட அறிக்கையில் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த பயணிக்கு பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அதில் 40 வயது மதிக்கத்தக்க பயணிக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கப்பலில் ஏறுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட ராபிட் டெஸ்டில் அவருக்கு நெகடிவ் என்று முடிவுகள் வந்தது குறிப்பிடத்தக்கது. அவருடன் பயணித்த மூன்று பேருக்கு தொற்று இல்லை என்றபோதும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.