சிங்கப்பூரில் தற்போது பணியாற்றிவரும் வெளிநாட்டு பணிப்பெண்கள் தாங்கள் வேலை பார்க்கும் முதலாளியிடம் இருந்து வேறு ஒரு முதலாளியிடம் வேலை பார்க்க உதவுமாறு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்ற மாதம் வரை வீட்டுவேலை பணிப்பெண்கள் நிலையத்திற்கு 140 க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துள்ளனர்.
மேலும் அந்த வெளிநாட்டு பணிப்பெண்களின் வேலை நியமன ஒப்பந்தங்கள் முடிவடைய இருக்கும் சூழலில், அவர்களை பிற முதலாளிகளிடம் வேலை செய்ய அனுமதி கடிதம் தர தற்போதுள்ள முதலாளிகள் மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருந்தொற்று பரவல் காரணமாக தற்போது வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் முதலாளிகள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விரைவில் இந்த நிலை மாறி வெளிநாட்டு பணிகள் விரைவில் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் சில தினங்களுக்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தங்களுக்கான வேலையிட மாற்றம் நிராகரிக்கப்பட்டு வருவதால், வெளிநாட்டு பணிப்பெண்கள் குழப்பத்தில் உள்ளனர்.